வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவருக்கு 2025-ல் மாத சம்பளம் இவ்வளவு தானா..?

Updated On: March 8, 2025 4:32 PM
Follow Us:
Petrol Bunk Job Salary Per Month in Tamil 
---Advertisement---
Advertisement

Petrol Bunk Job Salary 2025 Per Month in Tamil 

ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக அரசு துறை மற்றும் ரயில்வே துறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக தான் இருக்கும். பொதுவாக நாம் அனைவருமே அரசு துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசு துறை மற்றும் மற்ற துறைகளில் வேலை பார்ப்பவர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். அந்த வகையில் இன்று பெட்ரோல் பங்கில் வேலைபார்ப்பவரின் மாத சம்பளத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!

பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவருக்கு சம்பளம் எவ்வளவு..? 

அதுபோல நாம் அனைவருமே ஒரு பொருள் அதிக விலையாக இருந்தால் அதை வாங்கவே மாட்டோம். ஆனால் இன்றைய நிலையில் அதிக விலையாக இருந்தாலும் அதை வாங்கி பயன்படுத்துகிறோம் என்றால் அது தான் பெட்ரோல். பெட்ரோல் எவ்வளவு தான் அதிக விலையாக இருந்தாலும் அதை நாம் வாங்காமல் இருப்பதில்லை.

காரணம் பெட்ரோல் இருந்தால் தான் வாகனம் ஓட்ட முடியும். அதுபோல வாகனம் இருந்தால் தான் நாம் நினைத்த இடத்திற்கு சென்று வர முடியும். அதனால் பெட்ரோல் எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

இ-சேவை மையத்தில் வேலை பார்ப்பவரின் மாத சம்பளம் இவ்வளவா

சரி நீங்கள் பெட்ரோல் பங்கிற்கு சென்றிருக்கிறீர்களா..? பொதுவாக நாம் அனைவருமே பெட்ரோல் பங்கிற்கு சென்றிருப்போம். அப்படி செல்லும் போது அங்கு வேலை பார்க்கும் நபர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

 பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவருக்கு மாத சம்பளம் தோராயமாக 12,853 ரூபாய் வரை வழங்கபடுகிறது.  

Petrol Pump Worker Qualifications Tamil:

இந்த வேலைக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. சில நிறுவனங்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், பணம், மாற்றுச் செலவு ஆகியவற்றை சரியாக கணக்கிட வேண்டும்

வாடிகையாளர்களுடன் பேச தெரிந்திருக்க வேண்டும். நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும். இதில் ஷிப்ட் வேலை இருக்கும். காலை மற்றும் இரவு என இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்க்க நேரிடும்.

தேவையான ஆவணங்கள்:

  • SSLC / HSC தேர்ச்சி சான்றிதழ்
  • Aadhar Card, Voter ID
  • பேங்க் கணக்கு விவரங்கள் (சம்பளத்திற்காக)
  • நீங்கள் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் வேலை அனுபவ சான்றிதழ்

பதவி உயர்வு:

உங்களின் கல்வி திறன் மற்றும் அனுபவத்தை பொறுத்து பதவி உயர்வு கிடைக்கும். பெட்ரோல் பங்கில் இருக்கும் பணிகளாக இருப்பது Sales Attendant, Cashier,  Supervisor,Assistant Manager, Manager Owner / Franchise Owner போன்ற பதவிகள் இருக்கிறது.

ATM இல் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் இவ்வளவா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now