இ-சேவை மையத்தில் வேலை பார்ப்பவரின் மாத சம்பளம் இவ்வளவா..?

Advertisement

E-Sevai Maiyam Job Salary in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நம்மை விட நம் வீட்டில் இருப்பவர்களுக்கு தான் இந்த ஆசை அதிகமாக இருக்கிறது. நாம் படிப்பது எதற்காக நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காக தான். ஆனால் இன்றைய நிலையில் பலரும் படித்து கொண்டிருக்கும் போதே அரசு தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அனைவருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு காரணம், அதிக சம்பளம், ஓய்வூதியம் போன்றவை தான்.

ஆனால் அரசு வேலை அனைவருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் கிடைக்கும் வேலையை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். சரி நாம் தினமும் இந்த பதிவின் மூலம் ஒவ்வொரு துறைகளில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று இ-சேவை மையத்தில் வேலை பார்ப்பவரின் மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

இ-சேவை மையத்தில் வேலை பார்ப்பவரின் சம்பளம் எவ்வளவு..? 

பொதுவாக இன்றைய நிலையில் இ-சேவை மையம் இல்லாத ஊர்களே கிடையாது. அந்தளவிற்கு இ-சேவை மையம் அனைத்து ஊர்களிலும் உருவாகி வருகிறது. நாம் அனைவருமே நம்முடைய தேவைக்காக இ-சேவை மையத்திற்கு சென்றிருப்போம்.

அப்போது அங்கு இருப்பவர்களை பார்க்கும் போது நமக்கும் இ-சேவை மையத்தில் வேலை கிடைக்குமா என்ற எண்ணம் தோன்றி இருக்கும். அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால் இந்த லிங்கை கிளிக் செய்து இ-சேவை மைய வேலைக்கான தகுதி அளவுகோல்களை தெரிந்து கொள்ளுங்கள் 👉 இ-சேவை மையத்தில் வேலைக்கு சேர இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

சரி இப்பொழுது இன்னொரு கேள்வி. உங்கள் ஊரில் இருக்கும் இ-சேவை மையத்தில் வேலை பார்ப்பவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

E Sevai Maiyam Employee Salary 2025

ஆப்பரேட்டர் / கணினி ஆபரேட்டர்:

தோராயமாக ₹8,000 முதல் ₹15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு குறைந்தபட்ச சம்பளம் ₹10,000 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலாளர் / மேற்பார்வையாளர்:

தோராயமாக ₹15,000 முதல் ₹25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. அனுபவங்களை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

தொழில்நுட்ப ஆதரவு ஊழியர்:

தோராயமாக ₹12,000 முதல் ₹20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

கணக்காளர் / நிர்வாக ஊழியர்:

தோராயமாக  ₹15,000 முதல் ₹30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

இ சேவை மையம் பயன்கள்:

பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் வாழ்க்கை சான்றிதழ்கள், வாகன ரிஜிஸ்ட்ரேஷன், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பிற போக்குவரத்து தொடர்பான சேவைகள், வாகனம் மற்றும் லைசென்ஸ் தொடர்பான கட்டணம் செலுத்துதல்.

கல்வி தொடர்பான சேவைகளை வழங்குதல்.

வரி சம்மந்தப்பட்டதை செலுத்துதல், காப்பீடு திட்டங்கள் பதிவது, வேலைவாய்ப்புக்கு அப்ளை செய்தல், விவசாயம் நிதி, டிக்கெட் புக் செய்தல் இன்னும் பல சேவைகளை செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

இ-சேவை மையங்களின் நன்மைகள்:

நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

எளிதான முறையில் அப்ளை செய்வதற்கு உதவுகிறது.

காகித சேவையை குறைத்து டிஜிட்டல் முறையில் செயல்பாடுகளை செய்கிறது.

ATM இல் Security ஆக பணிபுரிபவரின் மாத சம்பளம் இவ்வளவா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement