நமக்கு வரும் OTP மூலம் மோசடி நடக்கிறதா.? அப்படி நடந்தால் அதை எப்படி தடுப்பது.? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

How To Avoid OTP Scam in Tamil

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இவ்வுலகில் பல விதமான மோசடிகள் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும், நாம் பேசும் கால்கள், மெசேஜ் மற்றும் OTP என நாம் அதிகமாக பயன்படுத்தும் முறைகளில் பல மோசடிகள் நடக்கிறது. ஆகையால், எல்லாவற்றிலும் நாம் கவனமாக இருப்பது அவசியம்.

பொதுவாக, நாம் போன் நம்பரை பல இடங்களில் பயன்படுத்தி இருப்போம். அதாவது, ஆதார் கார்டு, பேங்க் அக்கௌன்ட் என பல இடங்களில் நாம் பயன்படுத்தும் போன் நம்பரை ரெஜிஸ்டர் செய்து இருப்போம். ஆகையால், நமக்கு பல வழிகளில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக நமக்கு வரும் OTP மூலம் Scammer -கள் பலவிதமான TRANSACTIONS செய்யும் அளவிற்கு மோசடி நடக்கிறது. அதனால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதில் உங்களுக்கு வரும் OTP மூலம் மோசடி செய்யப்படுகிறதா.? அப்படி மோசடி செய்யப்பட்டால் எப்படி தடுப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

OTP மோசடி என்றால் என்ன.?

 how to check and stop otp scam in tamil

உங்கள் பணத்தை ஆன்லைன் மூலமாக திருடுவதற்காக உங்களுக்கு வரும் OTP -யை அவர்கள் அறிந்து அதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை திருடும் முறை ஆகும்.

மோசடி செய்பவர்கள், நம்மிடம் இருந்து மோசடி செய்வதற்கு பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். ஆகையால், நாம் செய்யும் அணைத்து செயல்களிலும் கவனமாக இருப்பது அவசியம். அதாவது, உங்களுக்கு வரும் மெசேஜ், கால் மற்றும் இமெயில் உள்ளிட்டவற்றை கிளிக் செய்வதில் அதிகம் கவனம் தேவை. உங்களுக்கு ஏதேனும் தேவையற்ற மெயில், மெசேஜ் மற்றும் கால் வந்தால் அதனை கிளிக் செய்யாமால் இருப்பது மிகவும் அவசியம்.

உங்களுக்கு வரும் மெசேஜ்களை போலியான மெசேஜ் என கண்டுபிடிப்பது எப்படி.?

How to Check And Stop OTP Scam in Tamil:

உங்களுக்கு வரும் OTP மூலம் மோசடி செய்பவர்கள் மோசடி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, உங்கள் போனில் *#62# என்று டயல் செய்தால் Not Forward என்று வந்தால் உங்கள் போன் நம்பர் எந்தவிதமான மோசடியிலும் சிக்கவில்லை என்று அர்த்தம்.

அதுவே, *#62# நம்பரை டயல் செய்ததும் CALL Forwarding என்று வந்தால் மோசடி செய்யப்படுகிறது என்று அர்த்தம். ஆகையால், *#62# நம்பரை டயல் செய்ததும் CALL Forwarding வரும் பட்சத்தில் உடனே ##002# என்று டயல் செய்தால் DISABLE ஆகிவிடும். ஆகையால்  மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

நாம் பேசும் கால்களில் கூட மோசடி நடக்கிறதா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 
Advertisement