போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்
நமது இந்தியன் தபால் நிலையத்தில் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவை அனைத்துமே மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்லலாம். குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்படும் சிறந்த சேமிப்பு திட்டங்களும் இருக்கின்றன. அதேபோல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தரக்கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களும் உள்ளது. ஆகவே இந்த பதிவில் நாம் அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அதிக வட்டி தரும் மூன்று போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் பற்றிய முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.
Post Office Monthly Income Scheme in Tamil
அதிக வட்டி தரும் சேமிப்பு – போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானதிட்டம் என்பது நிதியமைச்சகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்புத் திட்டம் ஆகும். இதில் ஒருவர் 9 லட்சம் தனியாகவும், அதுவே கூட்டு கணக்காக சேமித்தால் 15 லட்சம் வரைக்கும் சேமிக்கலாம். இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணத்துக்கு நீங்கள் ரூ.4,50,000/- தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,775 வட்டியாகக் கிடைக்கும்.
இந்த திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்→ தபால் அலுவலக மாத வருமான திட்டம்
National Savings Certificate Post Office:
அதிக வட்டி தரும் சேமிப்பு – தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே சமையம் ரிஸ்க் குறைவான ஒரு சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.7% வட்டி என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
உதாரணத்துக்கு நீங்கள் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1449 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
இந்த திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → தேசிய சேமிப்பு பத்திர திட்டம்..!
KVP Post Office Scheme in Tamil:
அதிக வட்டி தரும் சேமிப்பு – உங்கள் முதலீட்டை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்யலாம். ஏனென்றால் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது. 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம். இந்த திட்டத்தில் தற்போது 7.5% வட்டி என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |