Post Office National Savings Certificate Scheme in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து சேமிப்பு என்பது நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய சூழலை பொறுத்த வரையில் நமிடம் பண இருந்தாலே போதும் மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் தான் இங்கு நிலவுகின்றது.
அதனால் தான் நாம் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க நினைக்கின்றோம். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் தபால் துறையின் National Savings Certificate சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office National Savings Certificate Scheme Details in Tamil:
தகுதி:
இந்த National Savings Certificate சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்திய குடிமக்களாக இருந்தால் மட்டும் போதும்.
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த National Savings Certificate சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 5 வருடம் வரை சேமிக்கலாம்.
வெறும் 3,000 முதலீடு செய்தால் 5,06,966/- அளிக்கும் சேமிப்பு திட்டம்
வட்டி விகிதம்:
National Savings Certificate சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக வருடத்திற்கு 7.7% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
எவ்வளவு கிடைக்கும்:
நீங்கள் இந்த National Savings Certificate சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 1,20,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 5 வருடத்திற்கு 53,884 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 1,73,884 ரூபாயினை பெறுவீர்கள்.
HDFC வங்கியில் 10,000 முதலீடு செய்தால் 20,000 கிடைக்குமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |