2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்…!

post office recurring deposit scheme 2023 in tamil

Post Office Recurring Deposit Scheme 2023  

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படக்கூடிய நிறைய திட்டங்கள் உள்ளது. அத்தகைய திட்டங்களில் நிறைய நபர்கள் சேர்ந்து பயன் அடைகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு அத்தகைய திட்டங்கள் பற்றி என்ன என்பது கூட தெரியாமல் உள்ளது. சரி அதனை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் கூட போஸ்ட் ஆபீஸில் அதை பற்றி எப்படி விரிவாக கேட்பது என்ற குழப்பம் நிறைய நபர்களிடம் உள்ளது. அதனால் தான் நம்முடைய Schemes பதிவில் தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றி கூறிக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று போஸ்ட் ஆபீஸ் Recurring Deposit Scheme பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே இந்த பதிவை படித்து தபால் துறையில் உள்ள இத்தகைய திட்டத்தை பற்றி தெரியாத நபர்களுக்கும் தெரியாதபடுத்தலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ தபால் துறையில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 39,44,600 ரூபாய் பெறும் திட்டம்

Post Office Recurring Deposit Scheme in Tamil:

போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தில் 18 வயதில் இருந்து உள்ள இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் மற்றும் தனியாக மட்டும் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் மூன்று நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்திற்கான குறைந்த பட்ச தொகை 100 ரூபாய் ஆகும். அதிக பட்ச தொகை என்றால் உங்களுக்கு விருப்பம் உள்ள தொகையினை சேமிக்கலாம்.

அதேபோல உங்களுக்கான தொகையினை நீங்கள் தொடர்ச்சியாக 6 மாதங்கள் செலுத்த தவறினால் உங்களுடைய கணக்கு ரத்து செய்யப்படும்.

வட்டி விகிதம்%:

போஸ்ட் ஆபீஸ் உள்ள இந்த Recurring Deposit Scheme-ற்கான வட்டி விகிதம் ஆனது 5.8% ஆகும். மேலும் இந்த வட்டி விகிதமானது 5 வருடம் முடியும் வரை மாற்றப்படாமல் அப்படியே இருக்கும்.

முதிர்வு காலம்:

இத்திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். அதேபோல உங்களுடைய முதிர்வு காலம் 5 வருடம் முடிந்த இந்த திட்டத்தில் தொடர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

அதுபோல நீங்கள் 3 வருடத்தில் கணக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் உங்களுக்கு அப்போது உள்ள வட்டி விகிதத்தின் படி மட்டுமே சேமிப்பு தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 2,000 ரூபாய் செலுத்தினால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

தபால் துறையில் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மாதம் 2,000 ரூபாய் செலுத்தினால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office Recurring Deposit Scheme 2023  
மாதாந்திர சேமிப்பு தொகை  மொத்த சேமிப்பு தொகை  5 வருடத்திற்கான  வட்டி தொகை  மொத்த தொகை 
2,000 ரூபாய் 1,20,000 ரூபாய் 19,393 ரூபாய் 1,39,393 ரூபாய்

 

இதையும் படியுங்கள்⇒ 33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil