Post Office Time Deposit
பண கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும் அல்லவா..? ஆனால் ஏதாவது ஒரு வகையில் நாம் சேமிப்பு செய்ய விரும்புவோம். நம்மிடம் பணம் இருக்கும் போது அதனை சரியான வழியில் சேமிப்பது சிறந்தது. அனைவருமே சேமிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அனைவருக்குமே கஷ்டமான காலம் என்று ஒன்று வரும். அந்த நேரத்தில் நாம் சேமிக்கும் பணம் உதவும். அதனால் நீங்கள் சம்பாதிக்கும் போது அதில் கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நாம் அதிகமாக போஸ்ட் ஆபிஸில் தான் சேமித்து வருகின்றோம். அப்படி இருக்கும் போது வாடிக்கையாளர்களை இன்னும் மகிழ்விக்கும் வகையில் தபால் துறை புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம். இன்றைய பதிவில் அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தினை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டம்:
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் என்பது, தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திய தபால்துறையின் மூலம் செயல்படும் சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று.
அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதங்கள்,
இந்திய நிதி அமைச்சகத்தால் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் மாற்றியமைக்கப்படும்.
1 அக்டோபர் 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
- 1 ஆண்டிற்கான உங்கள் சேமிப்பிற்க்கு 6.9% வட்டி அளிக்கப்படுகிறது.
- 2 ஆண்டிற்கான உங்கள் சேமிப்பிற்க்கு 7% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 3 ஆண்டிற்கான உங்கள் சேமிப்பிற்க்கு 7% வழங்கப்படுகிறது.
- 5 ஆண்டிற்கான உங்கள் சேமிப்பிற்க்கு 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது.
வட்டியை சேமிப்பாக மாற்றும் வழி:
- நீங்கள் உங்கள் சேமிப்பு தொகைக்கான வட்டியை ஆண்டுதோறும் பெற விரும்பவில்லை என்றால், அதனை உங்கள் சேமிப்புக்கணக்கில் வரவுவைக்க நீங்கள் உங்கள் தபால் நிலையத்தில் அறிவுறுத்தலாம்.
- டைம் டெபாசிட் திட்டத்தில் 1 வருட சேமிப்பு கணக்குக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
தபால் அலுவலக நேர வைப்புத் திட்டத்தின் அம்சங்கள்:
- அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் முதலீடு 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் என 4 பிரிவுகளாக உள்ளது.
- ஒரு கணக்கில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
- இந்த திட்டம் ஒரு உறுதியான வருமானத்தை தரக்கூடிய திட்டமாகும்.
- அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தினை ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்ற ஒரு தபால் நிலையத்திற்கு எளிதாக மாற்றலாம்.
- அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தின் கணக்கை தனிநபரோ அல்லது கூட்டாகவோ தொடங்கலாம்.
- உங்கள் திட்டத்திற்கான முதிர்வு காலத்தை நீட்டிக்க உங்களால் முடியும்.
- உங்கள் முதலீட்டிற்கான வட்டியை உங்களின் கணக்கில் வரவு வைக்கும் வசதியுண்டு.
- அஞ்சல்துறையின் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூபாய் 1000 முதல் அதன் மடங்குகளில் நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தகுதிகள்:
இந்தியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.
10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவரும் இதில் சேரலாம்.
18 வயது நிரம்பாத பயனர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் இத்திட்டத்தில் சேரலாம்.
18 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், அவர்கள் பெயரிலே இத்திட்டத்தில் கணக்கை திறக்கலாம்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |