SBI RD Interest Rates 2024
நண்பர்களுக்கு வணக்கம்.. SBI வங்கியில் அக்கௌன்ட் வச்சிருக்கீங்களா அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கானது தான். இங்கு நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் SBI வழங்கும் RD அதாவது ரெக்கரிங் டெபாசிட் கணக்கை பற்றி தான். இங்கு நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.
நீங்கள் ஸ்டேட் பேக் ஆப் இந்தியா வங்கியில் ரெக்கரின் டெப்பாசிட் முதலீட்டு திட்டத்தில், முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதாவது இங்கு ரெக்கரின் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும், இந்த திட்டத்திற்கான முதலீட்டு காலங்கள் எவ்வளவு ஆண்டுகள் என்பது குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
SBI RD Scheme in Tamil
ரெக்கரிங் டெபாசிட் என்பது பொதுவாக இது ஒரு மாத முதலீட்டு திட்டம் ஆகும். மேலும் இந்த RD அக்கௌன்ட் ஓபன் செய்யும் போது நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்து ஓபன் செய்கிறீர்களோ, அந்த தொகையை தான் நீங்கள் அடுத்தடுத்த மாதம் டெபாசிட் செய்து வர வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் 1000 ரூபாய் கொடுத்து இந்த RD அக்கௌன்ட் ஓபன் செய்திருந்தால் உங்களுடைய மெச்சுரிட்டி காலம் முடியும் வரை மாதம் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்து வர வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்:
3 மாதத்துக்கு ஒருமுறை 5,550 ரூபாய் அளிக்கும் ICICI வங்கியின் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்..!
டெபாசிட் காலம்:
இந்த RD அக்கௌன்ட்டின் டெபாசிட் காலம் SBI வங்கியில் ஒரு வருடம் முதல் 10 வருடம் வரை வழங்கப்படுகிறது. ஆக உங்களுக்கு இந்த டெபாசிட் காலத்தில் உங்களுக்கு ஏற்ற காலத்தை தெரிவு செய்து முதலீடு செய்து வரலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்:
இந்த முதலீட்டு திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
யாருக்கு கூடுதலாக வட்டி கிடைக்கிறது?
SBI-யின் ஆர்டி முதலீடு திட்டத்திற்கு 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 0.50 கூடுதலாக வட்டி கிடைக்கிறது.
கடன் உதவி:
இந்த ஆர்டி முதலீட்டு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையை பொறுத்து 90% கடன் உதவி வழங்கப்படுகிறது.
SBI வங்கியில் என்னென்ன முதலீட்டு காலத்திற்கு எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க!!!
முதலீட்டு காலங்கள் | பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி | 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி |
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு | 6.80% | 7.30% |
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு | 7.00% | 7.50% |
3 வருடம் முதல் 4 வருடத்திற்கு | 6.75% | 7.25% |
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு | 6.50% | 7.00% |
இரட்ணடு வருடத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கு?
முதலீட்டு தொகை | பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி | 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி |
500 (12,000) | 912 | 978 |
1,000 (24,000) | 1,820 | 1,954 |
2,000 (48,000) | 3,641 | 3,913 |
3,000 (72,000) | 5,460 | 5,866 |
5,000 (1,20,000) | 9,101 | 9,775 |
10,000 (2,40,000) | 18,196 | 19,553 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
9th,11th மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |