வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பேட்மிண்டன் விளையாட்டில் உள்ள விதிகள் பற்றி தெரியுமா.?

Updated On: January 22, 2026 5:30 PM
Follow Us:
badminton game rules and regulations in tamil
---Advertisement---
Advertisement

Badminton Game Rules And Regulations

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டை விரும்ப கூடியவர்களாக தான் இருப்பார்கள். பள்ளி படிக்கும் பருவத்தில் கபடி, கோ கோ இன்னும் பல விளையாட்டுகள் இருக்கும். இந்த விளையாட்டில் சேர்வதற்கு யார் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்று கேட்டால் போதும் உடனே பேரை கொடுத்து விடுவோம். மேலும் டிவியில் விளையாட்டான கிரிக்கெட் அல்லது வேறு ஏதும் விளையாட்டு ஓடி கொண்டிருந்தால் போதும், ஏதோ நம்மலே விளையாடுவது போல உற்சாகமாக இருப்போம். ஒவ்வொரு விளையாட்டிற்கும் விதிமுறைகள் உள்ளன, அவற்றை தெரிந்து கொள்வது அவசியமானது. அதனால் இந்த பதிவில் badminton விளையாட்டு பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Badminton Game Rules And Regulations Pdf 

பேட்மிண்டன் விளையாட்டு பற்றிய தகவல்:

பேட்மிண்டன் விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (Badminton) என்னும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைக்கப்பட்டது.

இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு. இதில் பந்து ஆனது வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும்.

இந்த விளையாட்டினை இறகுப்பந்து, பேட்மிண்டன், ஷட்டில்காக் போன்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.

டென்னிஸ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா

பேட்மிண்டன் விதிகள்:

பேட்மிண்டன் விளையாட்டு பற்றிய தகவல்

இந்த விளையாட்டினை இரண்டு ஆடுகளமாக விளையாடலாம். அதாவது ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம்.

ஆடுகளம் அளவு:

ஒற்றையர் ஆடுகளமானது நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் இருக்க வேண்டும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line) இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் இருக்க வேண்டும்.

அதுவே இரட்டையர் ஆடுகளத்தில் நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர் இருக்க வேண்டும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும்.

பந்தின் அளவு:

இறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5. 50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின் மேல் இருக்கும். நீளம் 2 1/2 முதல் 2 3/4 அங்குலம் வரை இருக்கலாம்.

மட்டை:

மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும், விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.

வீரர்களின் விதிகள்:

நீங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஸ்கர்ட் அடிக்கும் போது அக்குளுக்கு கீழே இருக்க வேண்டும்.

அடுத்து காலானது வெள்ளை கோட்டினை தொட கூடாது.

இதில் 3 ஆட்ட விளையாட்டுகளில் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

ஓர் ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு அணியானது 21 புள்ளிகள் எடுக்க வேண்டும்.  இரண்டு ஆட்டத்தில் எந்த அணி அதிக புள்ளியில் உள்ளதோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாகும்.

வீரர்கள் எண்ணிக்கை:

ஒற்றையர் போட்டி (Singles): 1 வீரர் எதிர்த்து 1 வீரர் விளையாடுவர்.

இரட்டையர் போட்டி (Doubles): 2 வீரர்கள் இணைந்து மற்ற 2 வீரர்களை எதிர்த்து விளையாடுவர்.

தொடக்க சேவை:

விளையாட்டு தொடங்கும்போது, காயினி (coin) சுழற்றப்பட்டு யார் முதலில் சேவை செய்வார்கள் என்பதை தீர்மானிக்கலாம்.

சேவை செய்யும் போது, வாளிபந்தை (shuttlecock) இடது இடத்திலிருந்து வலது பகுதியில் அடிக்க வேண்டும்.

சேவை செய்யும்போது, ராக்கெட் இடது முட்டுக்காலுக்கு கீழே இருக்க வேண்டும்.

சேவை புள்ளி பெற்ற வீரர் தான் தொடரும்.

வீரர்கள் செய்யக்கூடாத தவறுகள்:

வாளிபந்தை வலைக்கு அடித்தல்.

கோர்ட்டின் எல்லைக்கு வெளியே பந்தை அடித்தல்.

வாளிபந்தை இரண்டு முறை தொடுதல்.

சேவை செய்யும் போது கால்கள் கோர்ட்டை கடந்து செல்லுதல்.

வலைக்கு தொடுதல் அல்லது ராக்கெட்டால் வலைவை தொட்டல்.

கால அவகாசம் (Timeout):

ஒவ்வொரு செட்டிலும் 11 புள்ளிகள் அடைந்தபோது ஒரு 60 விநாடி ஓய்வு கிடைக்கும்.

செட் முடிந்தவுடன் 2 நிமிடங்கள் ஓய்வு வழங்கப்படும்.

இறுதிச் செட்டில், 11 புள்ளிகள் அடையும்போது வீரர்கள் கோர்ட்டை மாற்றுவார்கள்.

முக்கிய விதிமுறைகள்:

வாளிபந்தை சேவை செய்யும் போது கீழ்நோக்கி அடிக்க வேண்டும்.

பந்தை கோர்ட்டின் எல்லைக்குள் விழுந்தால் புள்ளி கிடைக்கும்.

கோர்ட்டைத் தாண்டி விழுந்தால் எதிரணி புள்ளி பெறுவார்கள்.

தடவை தவறாக எடுத்தால் புள்ளி எதிரணிக்கு போகும்.

புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now