Anxiety Symptoms in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் வாழும் காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், தொழிற்சாலை கழிவுகளும், சுற்றுசூழல் மாசும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் பல்வேறு நோய்கள் வந்துகொண்டு தான் இருக்கும்.
அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தார்கள். ஆனால் நாம் புதிது புதிதாக நோய்களை கண்டறிந்து வருகின்றோம். இப்படி ஒரு சூழலில் நமக்கு ஏதாவது சிறிய அறிகுறி தென்பட்டால் கூட பயமாக தன இருக்கும். அதனால் தான் நம் பதிவின் தினமும் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று Anxiety Symptoms in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதால் உண்டாகும் நோய்கள் என்ன..
Anxiety என்றால் என்ன – Anxiety in Tamil

பொதுவாக ஆரோக்கியம் என்பது நம் உடல் சார்ந்தது மட்டும் கிடையாது. அது நம் மனம் சார்ந்ததும் கூட. என்ன தான் நம் உடலில் எந்த பிரச்சனைகளும் இல்லையென்றாலும், மனம் சரியாக இல்லையென்றால் நம் உடலுக்கு பல பாதிப்புகள் வரத் தான் செய்யும். அதை தான் Anxiety என்று சொல்கிறார்கள்.
அதாவது Anxiety என்றால் மனக்கவலை என்று சொல்லப்படுகிறது. பொதுவாக நம் அனைவருக்குமே கவலை என்பது இருக்கும். இவ்வுலகில் பிறந்த மனிதர்களில் யாருக்கு தான் கவலைகள் இல்லை சொல்லுங்கள்.
இந்த மாதிரி மனக்கவலைகள் அதிகம் உள்ள நபர்கள் எந்த நேரம் பார்த்தாலும் எதையோ நினைத்து கவலைப்பட்டு பதட்டத்துடனே காணப்படுவார்கள். சிறு சிறு விஷயங்களை கூட பெரிதாக எடுத்து கொள்வார்கள்.
நாம் இந்த பிரச்சனையை பெரிதாக எடுத்து கொள்ளமாட்டோம். ஆனால் இதை நாம் கண்டிப்பாக கவனித்தே ஆக வேண்டும். அதுபோல நமக்கு மனக்கவலை இருக்கிறது என்றால் அதற்கும் சில அறிகுறிகள் இருக்கின்றன. அது என்னவென்று பின்வருமாறு காணலாம்.
Anxiety வகைகள்:
Anxiety என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஏனென்றால் இதில் பல வகைகள் இருக்கிறது. அதனை பற்றி கீழே காண்போம்.
- சாதாரண ஆன்சைட்டி (general anxiety),
- சோசியல் ஆன்சைட்டி (Social anxiety)
- சாலோவிங் ஆன்சைட்டி (Swallowing anxiety)
- பர்ஃபாமன்ஸ் ஆன்சைட்டி (Performance anxiety)
- ஹெல்த் ஆன்சைட்டி (Health anxiety)
- செக்சுவல் ஆன்சைட்டி, (Sexual anxiety)
- ரிலேஷன்ஷிப் ஆன்சைட்டி (Relationship anxiety)
- டிரைவிங் ஆன்சைட்டி (Driving anxiety)
- போபியாக்கள் (Phobias)
மனக்கவலை அறிகுறிகள்:
ஒருவருக்கு மனக்கவலை இருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அதாவது,
- தூக்க தொந்தரவுகள்
- படபடப்பு
- மூச்சுத்திணறல்
- கைகள் மற்றும் கால்கள் பிணைத்தல்
- வியர்வை
- மயக்கம்
- குமட்டல்
- தசைகளில் விறைப்பு
- தூங்கி எழும் போது டென்ஷன் ஆன உணர்வு
- அதிகமான சிந்தனைகள்
- எதிலும் கவனம் இல்லாமை
- பசியிழப்பு
மேலும் இந்த மாதிரி அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு மனக்கவலைகள் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால் இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டால், மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
ஆன்சைட்டி வருவதற்கான காரணம்:
- மன அழுத்தம்
- மனசோர்வு
- உறவுகளால் ஏற்படும் மனக்கவலை
- அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆரோக்கியத்தில் மீது பயம் ஏற்படும்.
யாருக்கெல்லாம் ஆன்சைட்டி வரும்:
- சிறுவயதிலிருந்தே கூச்சம் அடையும் நபர்களுக்கு வரக்கூடும்.
- வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள், மறக்க முடியாத சோகங்கள் இருப்பவர்களுக்கு ஆன்சைட்டி வரும்.
- பரம்பரை காரணமாகவும், சில நபர்களுக்கு ஆன்சைட்டி ஏற்படலாம்.
- தைராய்டு அல்லது வேறு ஏதும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆன்சைட்டி வரக்கூடும்.
| மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |














