பீதி தாக்குதல் அறிகுறிகள் | Panic Attack Symptoms in Tamil..!
நமது உடலில் சிறிய காய்ச்சல் முதல் வேறு ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும் அதனை அறிகுறிகள் மூலம் நம்முடைய உடல் உறுப்புகள் வெளிப்படுத்திகிறது. இந்த அறிகுறிகள் அனைத்தும் நோயின் தாக்கம் மற்றும் வகைகளுக்கு ஏற்றவாறு இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் அனைவருக்கும் பயம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அத்தகைய பயத்தினை சிலர் வெளிக்காட்டி கொள்ளலாம் உள்ளேயே வைத்து கொள்வார்கள். இத்தகைய பயம் தோன்றும் போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் வரும். அதனால் இன்று பீதி தாக்குதல் அறிகுறிகள் பற்றியும் அது ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்…!
பீதி தாக்குதல் என்றால் என்ன..?
ஒரு மனிதனுக்கு தீடிர் பயம் அல்லது பதற்றம், அதிக உணர்வுகள், சாதாரணமான விஷயங்களுக்கு கூட அதிக பயம் மற்றும் பதற்றம், வேகமான இதயத்துடிப்பு, இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் முறையே பீதி தாக்குதல் எனப்படும்.
இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க
பீதி தாக்குதல் வரக் காரணம்:
ஒருவருக்கு பீதி தாக்குதல் என்பது மன அழுத்தத்தினால் வரக்கூடிய ஒன்றாக உள்ளது. இதுமட்டும் இல்லாமல் அதிகப்படியான மக்கள் கூட்டம், தீமை செய்யும் நபர்கள் மற்றும் பிடித்தமான ஒருவர் பிரிந்து செல்தல் அல்லது மிகப்பெரிய ஏமாற்றம் என இதுபோன்ற காரணங்களாலும் பீதி தாக்குதல் வருகிறது.
இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் சிறியளவில் இருந்தாலும் கூட நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
பீதி தாக்குதல் அறிகுறிகள்:
- வியர்வை
- அதிகப்படியான இதயத்துடிப்பு
- குமட்டல்
- வயிற்று பிடிப்பு
- நெஞ்சு வலி
- மயக்கம்
- தலைவலி
- கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை
- தலைசுற்றல்
- மூச்சுத்திணறல்
- அதிகப்படியான பயம்
- குளிர்
மேலே சொல்லப்பட்டுள்ள பீதி தாக்குதலுக்கான அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் அதனை உடனே மருத்துவரிடம் கூறி அதற்கான மருத்துவ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |