புளு காய்ச்சல் அறிகுறிகள் | Blue Fever Symptoms in Tamil..!

Advertisement

புளு காய்ச்சல் அறிகுறிகள் | Blue Fever Symptoms in Tamil..!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என யாருக்காக இருந்தாலும் வருவது சகஜமான ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் காய்ச்சல் வந்தால் மட்டும் எப்படியும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை எழுந்திருக்கவே முடியாத நிலையானது ஏற்படும். அப்படி பார்த்தால் நமது உடலில் போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணமே காய்ச்சல் அதிகமாக வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் காய்ச்சலில் டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் மற்றும் புளு காய்ச்சல் என பல வகைகள் இருக்கிறது. அதேபோல் இந்த காய்ச்சல் ஒவ்வொன்றிற்கும் நிறைய அறிகுறிகள் ஆனது இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு காய்ச்சலுக்கும் அதனுடைய அறிகுறிகளை வைத்தே கண்டு பிடித்து விடலாம். எனவே இன்றைய பதிவில் புளு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

ப்ளூ காய்ச்சல் என்றால் என்ன:

ப்ளூ காய்ச்சல் ஆனது மற்ற காய்ச்சலை போல் இல்லாமல் ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானலும் வரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதிகமாக குளிர் காலம் (அ) பனிக்காலம், மழைக்காலம் என இத்தகைய பருவ நிலைகளிலேயே அதிகமாக வருகிறது.

மேலும் ப்ளூ காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் காய்ச்சலாகும். அதேபோல் இந்த காய்ச்சல் நுரையீரலில் தொற்றினை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. இத்தகைய காய்ச்சல் சளி, இருமல் மற்றும் தும்மல் என இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் காற்றில் இருந்து பரவுகிறது. இதுவே ப்ளூ காய்ச்சல் எனப்படும்.

புளு காய்ச்சல் அறிகுறிகள்:

 ப்ளூ காய்ச்சல் அறிகுறிகள்

 

 

  1. தலைவலி
  2. தொண்டை வலி
  3. தசை வலி
  4. உடல் பலவீனமாதல்
  5. இருமல்
  6. காய்ச்சல்
  7. குளிர்

இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் புளு காய்ச்சளுக்கான அறிகுறைகளாக காணப்படுவதனால் ஒருபோதும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் உடனடி ஆலோசனை பெறுவது நல்லது.

சளி காய்ச்சல் யாருக்கு அதிகமாக வரும்:

  • குழந்தைகள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • உடல் எடை அதிகம் உள்ளவர்கள்
  • 65 வயதிற்கு மேல் உள்ள ஆண் மற்றும் பெண்கள்
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்
  • ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்
  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் இருந்தாலும் கூட வருமுன் எதையும் கவனிக்கும் பட்சத்தில் அனைவரும் கவனமாக இருப்பது அவசியம்.

ஜிகா வைரஸ் அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement