கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள்

prasava vali arikurigal

Delivery Pain Symptoms in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று  நம் பொதுநலம். காம் பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி வருவதற்கான சில அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை எப்பொழுது பிறக்கும் என்ற ஆசைகள் இருந்து வந்தாலும், குழந்தைகள் பிறக்க போவதற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியாமல்  இருக்கிறார்கள். குழந்தைகள் பிறக்க   போவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் மட்டும்தான் மருத்துவமனையில் சேர்வதற்கு வசதியாக  இருக்கும். மேலும் இவற்றின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சுகப்பிரசவத்தின் அறிகுறிகள்

கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை:

 delivery pain symptoms in tamil

கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய மூன்றவது ட்ரைமெஸ்டர் காலமான முதல் மாதத்தில் இருந்து  கவனத்தோடு இருப்பது மிகவும் அவசியமாகும். இது போன்ற ட்ரைமெஸ்டர் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பொய்யான பிரசவ வலிகள் ஏற்படுவதற்காண வாய்ப்புகள் அதிகமாவே இருக்கும்.

ஒரு சில பெண்களுக்கு ஏழாவது மாதம் கூட பிரசவமாகிவிடும், ஒரு சிலருக்கு ஒன்பதாவது மாதத்தில் பிரசவமாகிவிடும், மேலும் இது போன்ற பிரசவ வலிகள்  ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறிகள்:

 baby delivery symptoms in tamil

பிரசவ நேரம் நெருங்குவதை மிகவும் சுலமபாக கண்டுபிடிக்கலாம், அதாவது கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறப்புறுப்பு பகுதியின் கீழ் அதிகமான எடையும் மேல் வயிறு லேசான இடையுடன் இருந்தால் குழந்தை பிறக்க ஒருவாரம் இருக்கிறது என்று கர்ப்பிணி பெண்கள் தெரிந்துகொள்ளலாம்.

இவை கர்ப்பிணி பெண்களுக்கு தெரியவில்லை என்றாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கணித்து விடுவார்கள், மேலும் கர்ப்பிணி பெண்கள் கண்ணாடி முன் நின்று பார்த்தாலே தெரிந்துவிடும்.

அடுத்ததாக குழந்தையின் தலை அடி வயிறு  பகுதில் இருக்கும் பொழுது சிறுநீர் கழிக்கும் பொழுது அதிகமான அழுத்தத்தை கொடுக்கும். அதேபோல் பிரவத்தின் நாள் நெருங்கும் பொழுது அதிகமான சிறுநீர் வந்து கொண்டே இருக்கும்.

பிரசவ நேரம் நெருங்கும் பொழுது பெண்களின் பிறப்புறுப்பு பகுதியானது விரிவடைந்து கொண்டே இருக்கும், ஆனால் இதை அவர்களால் அறிய முடியாது, மருத்துவரின் பரிசோதனையின் போது மட்டும்தான் அறியமுடியும். பிரசவ நேரத்தின் போது  பிறப்புறுப்பு  10 செமீ அளவு விரிவடையும்.

அதேபோல் பிரசவ காலம் நெருங்கும் பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும், இவை புரோஸ்டாக்லாண்டின் என்னும் ஹார்மோன் சுரபியால் கருப்பையை மென்மையடைய செய்து, குடலை சுக பிரசவத்திற்க்காக சுத்தம் செய்யும்.

சில பெண்களுக்கு பிரசவ நேரம் வரும் பொழுது இடுப்பு வலி, முது வலி மற்றும் பத்து நிமிடம் விட்டு விட்டு வலி வந்து கொண்டு இருந்தால் பிரசவலிக்கான அறிகுறிகள் ஆகும். அவ்வப்போது சிலருக்கு பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளிப்படும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil