உணவுக்குழாய் புற்றுநோய் அறிகுறிகள் | Esophageal Cancer Symptoms
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மிகவும் கொடூரமான நோய் என்றால் அது புற்றுநோய் தான். இந்த நோய் ஒன்றோடு மட்டும் முடியாமல் நிறைய வகைகளையும் கொண்டுள்ளது. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மண்ணீரல் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய புற்றுநோய்களில் உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. இந்த நோய் சத்தமே இல்லாமல் மனிதனை கொள்ளும் நோயாக இருக்கிறது. ஆகாயல் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு வருமுன் காப்பதே சிறந்தது.
இதையும் படியுங்கள்⇒ சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!
உணவுக்குழாய் புற்றுநோய் என்றால் என்ன..?
நமது தொண்டையில் இருந்து வயிற்றுக்கு நாம் சாப்பிடும் உணவினை கொண்டுள்ள செல்லும் வேலையை உணவுக்குழாயில் உள்ள தசைகள் செய்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் உணவுக்குழாயில் உள்ள தசையில் ஆரம்ப காலத்தில் சில திசுக்கள் உருவாகி அதன் பின் அது கட்டியாக மாறுவதே உணவுக்குழாய் புற்றுநோய் ஆகும்.உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான காரணம்:
பெண்களை விட ஆண்களுக்கு தான் உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால் புகைபிடித்தல், புகையிலை பயன்படுத்துதல், மது அருந்துதல் போன்ற காரணங்கள் விளைவாக உணவுக்குழாய் புற்றுநோய் வருகிறது.
அதிக உடல் எடை இருப்பதன் காரணமாகவும் நமது உணவுக்குழாயில் அழற்சி ஏற்படுவது உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான காரணமாக இருக்கிறது.
நம்முடைய உணவுக்குழாயில் கீழ் முனையில் உள்ள செல்களில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட அது இத்தகைய புற்றுநோய் வருவதற்கான ஆரம்பமாகிறது.
அதேபோல தலையில் அல்லது கழுத்தில் புற்றுநோய் இருப்பவர்களுக்கும் உணவுக்குழாய் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.
மண்ணீரல் புற்றுநோய் அறிகுறிகள் |
உணவுக்குழாய் புற்றுநோய் அறிகுறிகள்:
நீங்கள் தினமும் உணவு சாப்பிடும் போது உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது சாப்பிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அது உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் அடங்கும்.
உங்களுடைய உடலில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் திடீரென உடல் எடை குறைந்து காணப்பட்டால் அதனை சாதாரணமாக நினைக்க கூடாது. ஏனென்றால் இதுவும் உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.
உடல் நலத்தில் எந்த குறைபாடும் இல்லாத போது திடீரென இரத்த வாந்தி மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.
உணவுக்குழாய் புற்றுநோய் அறிகுறியில் எந்த நேரமும் நெஞ்சு எரிச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு இதுபோன்றவற்றையும் அடங்கும். அதனால் எதையும் அலட்சிய படுத்தக்கூடாது.
தொண்டை அல்லது மார்பகத்திற்கு பின்னால் தீராத வலி போன்ற அறிகுறிகளும் காணப்படும்.
அதுபோல தோள்பட்டை அல்லது முதுகில் வலி ஏற்பட்டாலும் கூட இது உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதாவது அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலும் கூட அதனை மருத்துவரிடம் கூறி அதற்கான தக்க மருத்துவத்தை பெற வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |