Gerd Symptoms in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி இப்போது நாம் வாழும் காலகட்டம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது நாம் வாழும் இந்த காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், தொழில்சாலை கழிவுகளும், சுற்றுசூழல் மாசும் தான் காணப்படுகிறது.
இப்படி ஒரு சூழலில் நோய்க்கு பஞ்சமே கிடையாது. அதுவும் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் நோய்க்கு புதிதாக மருந்து கண்டுபிடித்தார்கள். ஆனால் இந்த காலத்தில் நாம் புதிது புதிதாக நோய்களை தான் கண்டறிந்து வருகிறேன். அந்த அளவிற்கு நாம் வளர்ச்சி அடைந்து வருகின்றோம். அந்த வகையில் யாருக்கு என்ன செய்யும் என்று நமக்கே தெரியாது. அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் Gerd Symptoms in Tamil என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
டிமென்ஷியா என்பது என்ன நோய்.. இந்த நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா..
Gerd என்றால் என்ன..?
Gerd என்பது Gastroesophageal Reflux Disease என்று சொல்லப்படுகிறது. அதாவது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் என்று சொல்லப்படுகிறது.
இந்த நோயானது உங்கள் வாய் மற்றும் வயிற்றை (உணவுக்குழாய்) இணைக்கும் குழாயில் மீண்டும் மீண்டும் வயிற்று அமிலம் பாயும் போது ஏற்படுகிறது. இந்த ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆனது உங்கள் உணவுக்குழாயின் புறணியை எரிச்சலடையச் செய்கிறது.
இங்கு வயிற்றில் இருந்து அமிலம் உணவுக்குழாய்க்குள் வருகிறது. இது வயிற்றை தொண்டையுடன் இணைக்கும் தசைக் குழாயாகும். உணவுக்குழாயில் மீண்டும் அமிலம் பாய்வது உணவுக்குழாய் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
நம்மில் பலபேருக்கு இந்த Gastroesophageal Reflux Disease இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் அமில வீக்கத்தின் அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதன் அறிகுறிகள் என்னவென்று இப்போது காணலாம்.
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா
Gerd Symptoms in Tamil – இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அறிகுறிகள்:
- உங்கள் மார்பில் எரியும் உணர்வு அதாவது நெஞ்செரிச்சல் – (பொதுவாக சாப்பிட்ட பிறகு, இது இரவில் அல்லது படுத்திருக்கும் போது மோசமாக இருக்கலாம்).
- மேல் வயிற்று வலி
- மார்பு வலி
- விழுங்குவதில் சிக்கல்
- உங்கள் தொண்டையில் ஒரு கட்டியின் உணர்வு
- தொடர்ந்து இருமல்
- குரல் நாண்களின் வீக்கம்
- புதிய அல்லது மோசமான ஆஸ்துமா
- நெஞ்சு வலி
- குமட்டல்
- வீக்கம், வாயு மற்றும் ஏப்பம்
- சில உணவு சகிப்புத்தன்மை
- தூக்கம் கலைதல்
மேலும் இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |