Puberty Symptoms in Tamil
பெண்கள் ஒரு வயதிற்கு பிறகு வயதிற்கு வருவார்கள். அதனை ஆங்கிலத்தில் Puberty என்றும் Age Attend என்றும் சொல்வார்கள். அந்த வயது என்பது 15 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் வயதிற்கு வருவார்கள். ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் அதாவது 10 வயது பெண் குழந்தைகள் வயதிற்கு வருகிறார்கள். அப்படி வருவதற்கு முக்கிய காரணம் உணவு முறைகள் தான். சில குழந்தைகள் பள்ளி சென்று அதன் பின்பு வயதிற்கு வருவார்கள். ஆனால் நம்முடைய வழக்க படி வயதிற்கு வந்தால் உடனே சடங்கு செய்வார்கள். அதேபோல் 15 நாட்கள் வரை வெளியில் விடவே மாட்டார்கள். அப்படி சென்றால் காத்து கருப்பு அண்டிவிடும். ஆனால் பள்ளியில் வயதிற்கு வருவதற்கு முன்பு பெண்களிடம் சில அறிகுறிகள் தெரியும். அதனை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம். ஆகவே அது என்ன அறிகுறி என்று பார்க்கலாம் வாங்க..!
Puberty Symptoms in Tamil:
பெண்களுக்கு எப்போதும் போல் இல்லாமல் முகம் அழகாக காணப்படும். அதேபோல் முகத்தில் பருக்கள் ஏற்படும். தலை முடியானது வறட்சியாக காணப்படும். முகத்தின் அழகு மாறுபடும்.
அதுபோல் மார்பக வளர்ச்சி ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும். அதேபோல் வளரவும் ஆரம்பிப்பார்கள். அக்குளில் முடி வளர்ச்சி ஏற்படும்.
முக பருக்கள் வருவதற்கு காரணம் உடலில் ஹார்மோன்கள் அதிகம் காணப்டும். அதனால் தான் முகத்தில் பருக்கள் வருகிறது.
பருவம் அடைந்த பிறகு ஏற்படும் மாற்றம்:
குரலில் மாற்றம் ஏற்படும். மாதம் மாதம் மாதவிடாய் ஏற்படும். அதேபோல் அதிகம் வளர்வார்கள். இதுபோல் மாதம் மாதம் என்ன மாற்றம் அடைகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். அதில் மாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்காக சிகிச்சை அறிவுரை பெற்றுக் கொள்ளவும்.
எந்த நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் என்ன பலன் தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |