Seizure Symptoms in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொண்டார்கள். அதனால் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறார்கள். இதனால் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். இதனால் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதன் பிறகு நோய்களை சரி செய்வதற்கு மருத்துவரை ஆலோசித்து டிரீட்மென்ட் எடுத்து கொள்கிறார்கள். நோய்கள் வந்த பிறகு அதனை சரி செய்வதற்கு மருத்துவரை தேடி அலைவதை விட நோய்கள் வருவதற்கு முன்னே அதனை பார்க்க வேண்டும். நோய்கள் வருவதற்கு முன்னே சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு நோய்க்கும் அறிகுறிகள் இருக்கிறது. அதனை முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் வலிப்பு வருவதற்கான காரணம், அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம்.
வலிப்பு என்றால் என்ன.?
வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே தவிர அது நோய் அல்ல. அதாவது மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிக காய்ச்சல், உயர் இரத்த அழுத்தத்தால் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிகுறிகளாக தெரிவிப்பதற்கே வலிப்பு ஏற்படுகிறது.
ஒருவருக்கு வலிப்பு ஏற்படும் பொழுது அவர்களுக்கு கை மற்றும் கால்கள் இழுத்துக்கொள்ளும், வாயில் இருந்து நுரை தள்ளும், கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையே சிக்கி கடிப்பது, வாயில் இருந்து ரத்தம் வலிந்து, சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார்கள். இருப்பினும் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வருவார்கள் இதற்கு பெயர் தான் வலிப்பு. சுருக்கமாக கூறினால் வலிப்பு என்பது மூளையில் மின் செயல்பாட்டின் திடீர் எழுச்சியாக இருக்கிறது. இந்த பிரச்சனையானது குறுகிய காலத்திற்கு ஒரு நபரை பாதிக்கிறது.
வலிப்பு வர காரணம்:
உங்களுடைய குடும்பத்தில் யாருக்கும் இருந்தாலும் வலிப்பு நோய் ஏற்படும். குடும்பத்தில் யாருக்கும் இல்லாமல் இருந்தாலும் கூட வலிப்பு நோய் ஏற்படும்.
ஒரு சிலருக்கு மூளைக் காய்ச்சல், பக்கவாதம் பிரச்சனை ஏற்பட்டாலும் வலிப்பு பிரச்சனை வாய்ப்பு உள்ளது. தலையில் பலமாக அடிப்பட்டாலோ, அறுவை சிகிச்சை செய்தாலோ, மூளையில் உள்ள கட்டிகளாலோ, மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவினாலோ கூட வலிப்பு பிரச்சனை ஏற்படும். தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு மூளை நரம்புகளில் இரத்த ஓட்டம் உறைவதாலும் வலிப்பு பிரச்சனை ஏற்படும்.
வலிப்பு அறிகுறிகள்:
தற்காலிக குழப்பம்
உங்களால் கட்டுப்படுத்த முடியாத கைகள் மற்றும் கால்களில் அசைவுகள் ஏற்படும்.
பயம் அல்லது பதற்ற நிலை ஏற்படும்.
அதிகமான வியர்வை, உமிழ்நீர் வெளியேறுதல், தோல் வெளிர் நிறமாக அல்லது சிவப்பு நிறமாக காணப்படும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |