முக வீக்கத்தின் அறிகுறிகள்..! | Symptoms of Facial Swelling in Tamil

Advertisement

Symptoms of Facial Swelling in Tamil

பொதுவாக, நம் உடலில் ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனை தோன்றுகிறது என்றால், அதற்கான அறிகுறியாக நமக்கு பல பிரச்சனைகள் வரும். முக்கியமாக ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றும். அவ்வாறு அறிகுறிகள் தோன்றும் போதே அதனை ஆராய்ந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். அந்த வகையில் முக வீக்கத்தின் அறிகுறிகள் பற்றி இப்பதிவில் படிந்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஒரு சிலருக்கு முகம் அடிக்கடி வீங்கும். ஆனால், இந்த வீக்கத்தை பலபேர் சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். ஒரு சிலர் மட்டுமே அதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் தெரிந்து கொண்டு அதற்காக சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஆகையால், முகத்தில் வீக்கம் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதையும், அதற்காக காரணங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What is The Symptoms of Face Swelling in Tamil:

What is The Symptoms of Face Swelling in Tamil

முக வீக்கம் என்றால் என்ன.?

முக வீக்கம் என்பது உடலில் ஏற்படும் பல நோய்கள் மற்றும் அவற்றின் தாக்கத்தால் ஏற்படுவது ஆகும். இதனால், முகம்  புடைத்தும் காணப்படும். பெரும்பாலும் முக வீக்கம், பூச்சு கடி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக ஏற்படும் அழற்சி போன்றவற்றால் முகம் வீங்கி காணப்படுகிறது.

முக வீக்கத்தின் அறிகுறிகள்:

  • முகத்தில் வலி.
  • முகம் சிவந்து இருத்தல்.
  • காய்ச்சல்.
  • படை நோய்
  • மூச்சுத்திணறல் ஏற்படுதல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • வாந்தி

வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்

முக வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

முக வீக்கம் ஏற்படுவகற்கு இரண்டு பொதுவான காரணங்கள் உள்ளது. ஒன்று தொற்று மற்றொன்று ஒவ்வாமை எதிர்வினைகள் ஆகும். இதில் பெரும்பாலும்  தொற்று ஏற்படுவதால் மட்டுமே முகம் வீங்கி காணப்படுகிறது.

தொற்று காரணங்கள்:

  • பல் அல்லது வாயில் ஏற்படும் தொற்றுகள் முக வீக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படும் தொற்றுகள் முகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே வீங்க செய்யும் .
  • உமிழ்நீர் சுரப்பியில் ஏற்படும் தொற்றின் மூலம் முகம் வீக்கம் உண்டாகலாம்.
  • சருமத்தின் மேற்பகுதியில் ஏற்படும் தொற்றின் மூலம் முகம் வீங்க செய்கிறது.
  • கண்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கண் அழுத்த நோய் அறிகுறிகள்

ஒவ்வாமை காரணங்கள்:

  • உணவு ஒவ்வாமை மற்றும் மருந்து ஒவ்வாமையினால் முகம், உதடுகள் அல்லது நாக்கில் வீக்கம் ஏற்படலாம்.

👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉t.me/pothunalam

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement