காணும் பொங்கல் கட்டுரை | Kaanum Pongal Katturai in Tamil

Advertisement

காணும் பொங்கல் என்றால் என்ன? | Kaanum Pongal Endral Enna

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காணும் பொங்கல் என்றால் என்பதை கட்டுரை வடிவில் கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். இந்துக்கள் பண்டிகைகளில் மற்ற பண்டிகைகளை விட அனைவருக்கும் பிடித்த பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். அதிலும் இறுதியாக வரக்கூடிய காணும் பொங்கல் என்றால் அனைவருக்கும் மனதில் மிகுந்த சந்தோசம்.

பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலிற்கு முதல் நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். பெண்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் இந்த காணும் பொங்கல். இந்த பதிவில் காணும் பொங்கல் பற்றிய ஒரு சிறிய கட்டுரையை படிக்கலாம் வாங்க..

காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

kKanum Pongal Katturai in Tamil:

பொருளடக்கம்:

முன்னுரை 
காணும் பொங்கல் என்றால் என்ன 
காணும் பொங்கலின் சிறப்பு 
காணும் பொங்கல் எதற்காக
உறவுகள் சேரும் நாள் 
முடிவுரை 

முன்னுரை:

காணும் பொங்கல் என்பது சாதி பேதமின்றி அனைவரும் கொண்டாடும் விழாவாகும். இந்த நான்காம் நாளான பொங்கலானது கன்னி பெண்களுக்குரியது. இந்த நாளில் வீட்டில் இருக்கக்கூடிய இளம்பெண்கள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள். பல பேரை, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது என்று இந்த காணும் பொங்கலை எடுத்துக்கொள்ளலாம்.

காணும் பொங்கல் என்றால் என்ன:

காணும் பொங்கல் (கன்னி பொங்கல்) அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டுமென்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வது கன்னி பொங்கலாகும். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் ஒன்றாக இருந்து அந்த நாளில் கொண்டாடி மகிழ்வார்கள்.

காணும் பொங்கலின் சிறப்பு:

பொதுவாக காணும் பொங்கல் பண்டிகையானது கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளையே சார்ந்து இருக்கிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் சேர்ந்து ஒன்றுகூடி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காணும் பொங்கல் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு நமக்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவோம். இதைத்தான் காணும் பொங்கல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதுதான் தவறு. பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக, காக்கா குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பெண்கள் பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

மாட்டு பொங்கல் கட்டுரை

காணும் பொங்கல் எதற்காக:

ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகம் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்க வேண்டும். கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழ வேண்டும்  என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும். ஆனால் இந்த பண்பாடு இப்போது மாறி தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல இடங்களை காணச் செல்கின்றனர்.

உறவுகள் சேரும் நாள்:

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல். பேருந்து, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் என நவீன வசதிகள் இல்லாத காலத்தில், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதே இது போன்ற பண்டிகை நாட்களில் தான் என்று சொல்லலாம். பிரிந்த உறவு முறைகளும் இன்றைய நாளில் ஒன்று சேருவார்கள்.

முடிவுரை:

முக்கியமாக காணும் பொங்கலன்றும் பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற எண்ணற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல் என்பது உற்றார், உறவினர்கள், நண்பர்களைக் கண்டு இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷம் அடைவதே காணும் பொங்கலாகும். இந்த கன்னி பொங்கல் அன்று பிரிந்த அனைத்து சொந்தங்களும் ஒன்று சேர்ந்து வருடம் முழுவதும் சந்தோசமாக இருக்க அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai

Advertisement