சாதனைப் பெண்கள் கட்டுரை | Women’s Achievement Essay in tamil
இந்த உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் எத்தனை. உடல் உறுதி கொண்டு இருக்கும் ஆண்களை விட மனவுறுதி அதிகம் உள்ள பெண்கள் எப்போதும் சிறப்பானவர்கள் தான். சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணம் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பூ மகள்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒரு சில சாதனை பெண்களின் வீரத்தை கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
வேலுநாச்சியார் |
ஜெயலலிதா |
அன்னை தெரசா |
கமலா தேவி |
விளையாட்டு துறையில் பெண்கள் |
முடிவுரை |
முன்னுரை:
- Sadhanai Pengal Katturai: வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் இப்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது. அன்பு, ஆதரவு, அடக்கம் இந்த மூன்று பொருளுக்கும் அர்த்தமாக மனித குலத்தில் வாழும் இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண்கள்.
- உலகிற்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நாட்டின் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரசா போன்றோரின் பெருமையை இந்த உலகம் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறது. இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் சிவனுக்கு சக்தி போல தன் கணவருக்கு பக்க பலமாய் இருந்து வருகின்றனர்.
வேலு நாச்சியார்:
- Women’s Achievement Essay in tamil: சுதந்திரத்திற்காக ஆண்கள் மட்டும் போராடி கொண்டிருந்த போது, பெண்களின் சார்பில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய முதல் வீராங்கனை வேலுநாச்சியார் அவர்கள். அவர்களின் தைரியத்தை இப்போது உள்ள பெண்களுக்கு பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கும் அளவிற்கு சாதனை படைத்துள்ளார்.
ஜெயலலிதா:
- அரசியல் சாசனத்தில் அமர பல ஆண்கள் இருக்கும் போது எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதா அவர்கள். அரசியலில் இருந்த போது நாட்டிற்கு பல நன்மைகளை செய்துள்ளார்.
அன்னை தெரசா:
- உணவு, உடை, இருப்பிடம் இல்லாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கு, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், சமூகத்திற்கு பெரும் பாரம் என்று ஒதுக்கப்பட்டவர்களையும் கவனிப்பதே தன் வாழ்க்கையின் தலையாய கடமையாக எண்ணி வாழ்ந்த தியாக செம்மல் தான் உலக மக்களின் அன்னை தெரசா அவர்கள்.
கமலா தேவி:
- சாதனைப் பெண்கள் கட்டுரை: தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் கமலா தேவி. ஆண்களைப் போல், பெண்களுக்கும் அரசியலில் பங்கு உண்டு என்பதை நிலை நிறுத்தியவர். தேசப்பிதா காந்தி துவங்கிய சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்ற அறப்போர்களில் பங்கேற்று சிறை சென்றார். பெண்கள் முன்னேற்றத்தில், அக்கறையும், பற்றும் கொண்டு உழைத்தார் கமலாதேவி.
விளையாட்டு துறையில் பெண்கள்:
- Sadhanai Pengal Katturai: அரசியல், வீரம், கருணை போன்றவற்றில் மட்டும் பெண்கள் கால்தடம் பதிக்காமல் விளையாட்டு துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். 16 வயதிலேயே கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுத்தவர் ஷஃபாபி வர்மா. சானியா மிர்சா, சாய்னா நேவால், பிவி சிந்து போன்ற பெண்கள் டென்னிசில் வீராங்கனையாக திகழ்கிறார்கள்.
முடிவுரை:
- Sadhanai Pengal Katturai: பெண்கள் விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுதுறை, அரசியல், நகை வடிவமைப்பு, சமூக வலைதளம், விமானம், விளையாட்டு, சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல் துறை போன்றவற்றில் பல சாதனைகளை செய்து வருகின்றனர்.
- இன்னும் உலக வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்த பெண்மணிகள் எத்தனையோ பேர் உள்ளார்கள். அவர்களின் தியாகத்தையும், சாதனையையும் போற்றும் விதமாக தான் மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Tamil Katturai |