Advertisement
செம்மொழியான தமிழ் மொழி கட்டுரை | Tamil Moliyin Thani Thanmai Katturai
இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. அதில் மிகவும் தனித்தன்மையை கொண்டும், தனி சிறப்புகளையும் கொண்டுள்ளது நம்முடைய தமிழ் மொழி. உலகில் காலத்தால் அழியாமல் இருக்கும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது நமது தமிழ். மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாக இருக்கும் தமிழ் மொழியின் சிறப்பு எண்ணிலடங்கா கணக்கில் உள்ளது. நாம் இந்த தொகுப்பில் தமிழின் சிறப்பை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
செம்மொழியான தமிழ் |
தமிழின் சிறப்பு |
தமிழின் நிலை |
முடிவுரை |
முன்னுரை:
- Tamil Moli Katturai in Tamil: தமிழின் பெருமையை தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டில் உள்ள பல தலைவர்களும் பாராட்டியுள்ளனர். மற்ற மொழிகள் எல்லாம் பேசுவதற்கு மட்டும் தான் உபயோகப்படும். ஆனால் தமிழ் உடலோடும், உணர்வோடும் கலந்த ஒரே மொழி. சங்கத்தை அமைத்து வளர்க்கப்பட்ட மொழி என்ற சிறப்பை பெற்றுள்ளது தமிழ்.
- தமிழ் மொழி 4400 ஆண்டுகள் பழமையானது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழின் தொன்மையை போற்றும் விதமாக அதனை பழந்தமிழ்⸴ இடைக் காலத்தமிழ், தற்காலத்தமிழ் என மூவகையாக பிரித்துள்ளனர். பாரதியார் தமிழுக்கு அழகு சேர்க்கும் அளவிற்கு “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியுள்ளார்.
செம்மொழியான தமிழ்:
- Tamil Moli Katturai: 2004-ல் தமிழ் மொழி செம்மொழி என்ற பெருமையை பெற்றது. தொன்மை, தனித்தன்மை, பொதுமை பண்பு, நடு நிலைமை, தாய்மை தன்மை, தனித்து இயங்கும் தன்மை, இலக்கண, இலக்கிய வளம், கலைநயம், உயர்ந்த சிந்தனை, மொழிகோட்பாடு போன்ற பண்புகளை கொண்டதால் தான் தமிழ் செம்மொழி என்ற பெயரை பெற்றுள்ளது.
- ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி. செம்மொழி என்பதற்கு செம்மையான மொழி என்று அர்த்தம்.
தமிழின் சிறப்பு:
- தமிழ் மொழி சிறப்பு கட்டுரை: நம்முடைய மொழியில் எழுந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், புது கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் தமிழ் வளர்ச்சியை அடைவதற்கு உதவியாக இருந்தது. திருவள்ளுவர், கம்பர், பாரதியார், ஓளவையார் போன்றோர்கள் தமிழ் மொழியை வளர்த்து வந்தார்கள்.
- திராவிட மொழிக்குடும்பத்தில் நம்முடைய மொழி தாய்மொழியாக உள்ளது. இன்று உலகில் எழுந்த மொழிகள் பலவற்றிற்கு தமிழ் அடித்தளமாக உள்ளது. நம்முடைய தமிழர்கள் உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்து காட்டியவர்கள். காரைக்குடியில் தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக தமிழ் தாய் எனும் பெயரில் கோவில் உள்ளது.
தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை |
தமிழின் நிலை:
- Tamil Mozhi Katturai: தமிழ் மொழிக்கு அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. பழங்காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தமிழ்மொழிக்கு வந்த அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி தமிழை வளர்த்து வந்தனர்.
- இப்பொழுதும் ஆங்கில மொழியின் தாக்கம், வடமொழியின் ஆதிக்கம் எழுந்துள்ளது. நம்முடைய மொழியை காப்பது இந்த நாட்டில் உள்ள தமிழர்களின் கடமையாகும். தமிழ் அழியாமல் பேணிக்காப்பதற்கு முடிந்த வரை தமிழ் மொழி கல்வியை படிப்பது நல்லது. ஆங்கிலம் படிப்பது தவறு அல்ல ஆனால் அது தமிழின் வளர்ச்சியை தடுக்காத அளவிற்கு இருக்க வேண்டும்.
முடிவுரை:
- தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை: “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” வரிகளுக்கு ஏற்ப நம்முடைய மொழி இன்று சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அந்த சிறப்பை நாமும் காத்து தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- தாய்மொழியான தமிழ் தொன்மையையும் சிறப்பையும் கொண்டு புகழின் உச்சியில் உள்ளது, அதனுடைய மேன்மைக்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் இலட்சியமாக இருக்க வேண்டும்.
வாழ்க தமிழ்..! வளர்க தமிழ்..!
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |
Advertisement