குழந்தைகள் தின பேச்சு போட்டி வரிகள்..! Easy Children’s Day Speech in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நவம்பர் 14 இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள். இந்தியாவில் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் அவர் குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பாகும். இத்தினமானது குழந்தைகளின் உரிமைகள், நலன் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு கொண்டாடப்படுகிறது. 1964-ஆம் ஆண்டில், நேரு அவர்களுக்கு கௌரவமளிக்கு வகையிலும் குழந்தைகள் மீது அவர் வைத்திருந்த அன்பை நினைவூட்டும் வகையில் குழந்தைகள் தினமானது நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சரி இந்த பதிவில் குழந்தைகள் தினம் அன்று பேசுவகத்திற்கு உதவும் சில எளிமையான வரிகளை படித்தறியலாம் வாங்க.
Easy Children’s Day Speech in Tamil
1) அனைவருக்கும் வணக்கம்
2) எனது பெயர் காருண்யா
3) இன்று நவம்பர் 14 அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
4) குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம் என்ற அடிப்படையில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
5) இந்தியாவில் நவம்பர் 14-ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
6) ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக அமைத்துள்ளது.
7) இவர் குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பு, அக்கறையின் காரணமாக இவரின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகளால் இவர் நேரு மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
8) குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொண்ட நேருஅவர்களின் பிரந்த நாளாக கொண்டாடப்படுவது சிறப்புக்குரியதாகும்.
9) இவர் குழந்தைகளை நாட்டின் பலமாகவும் சமூகத்தின் அடித்தளமாகவும் கருதியதோடு குழந்தைகளின் உரிமைகள், எதிர்கால நலன்கள் போன்றவற்றை கருத்திக்கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
10) இன்றைய குழந்தைகளே நாளைய எதிர்கால தூண்கள் அவர்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.
நன்றி.. வணக்கம்!!!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |