கல்வியில் காமராஜரின் பங்களிப்பு | Kamarajar Contribution Towards Education in Tamil.!
ஜூலை மாதத்திற்கே சிறப்பினை சேர்க்கும் வகையில் பிறந்தவர் தான் கர்ம வீரர் காமராஜர். காமராஜர் 1903-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் பிறந்தது என்னவோ விருதுநகராக இருந்தாலும் கூட தமிழகம் முழுவதும் அனைத்து மக்களின் நலன் கருதியும், நாட்டின் முன்னேற்றத்திறகாகவும் காலம் முழுவதும் பாடுபட்ட மாமனிதர் தான் கர்ம வீரர் காமராஜர். இவர் பள்ளி படிப்பை அதிகமாக படிக்கவில்லை என்றாலும் கூட படிக்காத மேதை என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 2023-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி அன்று 121-வது பிறந்தநாள் காணும் பெருந்தலைவர் காமராஜர் கல்வி பணியில் செய்த பங்களிப்பு மற்றும் தொண்டினை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..!
காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை |
Kamarajar Contribution Towards Education | Kamaraj Achievements in Education in Tamil:
முன்னுரை:
1903-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி பிறந்தவர் தான் கர்ம வீரர் காமராஜர். இவர் முன்னாள் முதலமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அரசியல் தலைவர் என பல வகையான தோற்றங்களுடன் வாழ்ந்தார். மேலும் இவரின் இத்தகைய சிறப்பானது காமராஜரை கிங்க் மேக்கர் காமராஜர் அழைக்கும் வகையில் மிகவும் விமர்சனமாக மாறியது. இவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் விதிகமாக தமிழக்தில் அறிவிக்கப்பட்டது.
கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம்:
கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம் என்ற வார்த்தைக்கு உரிமையாளர் காமராஜர் ஒருவரே. ஏனென்றால் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக 6,000 பள்ளிகள் மூடப்பட்டது.
அதன் சில நிபந்தனை மற்றும் சிக்கல் காரணமாக ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு அடுத்த படியாக ஆட்சிக்கு வந்த காமராஜர் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்ததோடு மட்டும் இல்லாமல் மேலும் 12,000 புதிய பள்ளிகளையும் திறந்தார்.
மேலும் பரம்பரை அடிப்படையிலான தொழிற்கல்வித் திட்டத்திற்கு முற்று புள்ளியினையும் வைத்தார். அதோடு மட்டும் இல்லாமல் சுமார் 300 மக்கள் தொகைக்கொண்ட அனைத்து கிராமப் புறங்களிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கினார். காமராஜரின் இந்த செயல் ஆனது பட்டித் தொட்டி எங்கும் பள்ளிக் கூடம் என்று பெருமிதம் சேர்க்கும் வகையில் இருந்தது.
மதிய உணவுத் திட்டம்:
காமராஜர் ஒரு முறை திருநெல்வேலிக்கு செல்லும் போது ஒரு சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது காமராஜர், ரயில் கடக்கும் வரை காத்திருந்தபோது, சிறு சிறுவர்கள் தங்கள் ஆடுகளை மேய்ப்பதைக் கவனித்தார். மற்றும் கால்நடைகள், அவர் ஒரு சிறு பையனிடம், “நீங்கள் மாடுகளை என்ன செய்கிறீர்கள்? ஏன் பள்ளிக்கு செல்லவில்லை?” என்று கேட்டார். சிறுவன் உடனடியாக பதிலளித்தான், “நான் பள்ளிக்குச் சென்றால், எனக்கு சாப்பிட உணவு தருவீர்களா? என்று ஒரு சிறுவன் சாதாரணமாக கேட்டான்.
ஆனால் இத்தகைய சம்பவம் ஆனது அவரை பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதனால் காமராஜர் அவர்கள் உடனே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பசி அறியாமல் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1956-ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்ததை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
மாணவர்களுக்கு சீருடை:
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் சமம் என கருதி வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர்களுக்கான சீருடை திட்டத்தை அறிமுகம் செய்தார். மேலும் 11-ஆம் வகுப்பு வரை இலவச கல்வியினை கற்க வேண்டும் என்றும் அமல் படுத்தினார்.
அதேபோல் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சதவிகிதமானது 45% இருந்து 75% ஆக உயர்ந்தது.
தனித்துவமிக்க மனிதர்:
இவர் எந்த ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்றும் புத்தகங்களை படிக்கவில்லை என்றாலும் கூட அனைத்தினையும் அறிந்த ஒரு தனித்துவமிக்க நபராக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது.
மேலும் இவர் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளையும், அங்குள்ள ஆறுகள், ஏரிகள் என அனைத்தினையும் அறிந்ததோடு மட்டும் இல்லாமல் எந்த பகுதியில் மக்கள் என்ன மாதிரியான நடைமுறை வாழ்க்கையினை வாழ்கிறார்கள் என்றும் எந்த விதமான புத்தகங்களையும் படிக்காமல் தெரிந்துக் கொண்டவர். ஆனால் இவருக்கும் புவியியல் மட்டும் தான் தெரியும்.
முடிவுரை:
அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று 1975-ஆம் ஆண்டு காமராஜர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அதேபோல் இவர் இறந்த பிறகு இவரின் பெருமை நிலைத்து நிற்கும் விதமாக தமிழக அரசால் 1976-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
காமராஜரின் குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை |
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |