பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்

Advertisement

பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் | Ponniyin Selvan Story in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதை சுருக்கத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இது ஒரு பெரிய கதை ஆகும். ஆக பொன்னியின் செல்வன் கதையை மிக சுருக்கமாக தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Ponniyin Selvan Story in Tamil:

பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜ சோழனை பற்றிய வரலாறு தான் உள்ளது. இந்த கதை முழுவதும் இருப்பது வந்தியத்தேவன் என்ற போர் வீரன் தான் கூடவே வருவார்.

வந்தியத் தேவனை மையமாக கொண்டு தான் இந்த கதை முழுவதும் போகும். இந்த கதையை கல்கி அவர்கள் 5 பக்கமாக எழுதி இருப்பார்கள்.

பாகம் ஒன்றில் என்ன கதை என்றால், சோழர்கள் தமிழகத்தை ஆட்சி செய்திருந்த நேரம், அப்பொழுது சோழர்களுக்கு எதிராக சாதி ஆலோசனை கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கும். அதாவது சோழ பரம்பரையில் யாரும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று குறுநில மன்னர்கள் எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சதி ஆலோசனை கூட்டத்தை நடத்துவார்கள், அந்த சதித்திட்டம் எங்கு நடக்கிறது, எங்கு நடக்கிறது, எதற்கு நடக்கிறது, சோழர் வம்சத்தினருக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரியாதா? அது தெரிந்து அவர்கள் என்ன செய்தார்கள் கடையில் சோழர் மன்னர்கள் வெற்றி பெற்றார்களா?, அல்லது சதி நடத்திய அந்த குறுநில மன்னர்கள் எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு தலைவனை தேர்ந்தெடுத்தார்களே அவர்கள் வெற்றி பெற்றார்களா, யார் ஆட்சிக்கு வந்தார்கள், யார் சோழ தேசத்தை ஆண்டார்கள் என்பதை பற்றியது தான் இந்த கதை.

இந்த கதையை கல்கி அவர்கள் மிகவும் சுவாரசியமாக எழுதி இருப்பார்கள். இவற்றில் சுந்தர சோழன் தான் மன்னராக இருப்பார். அவருடைய பிள்ளை ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகியவர்களை பற்றி தான் இருக்கும்.

அருள்மொழி வர்மன் என்பவரை தான் பொன்னியின் செல்வன் என்று சொல்கிறோம், அவர் தான் ராஜராஜ சோழன், அவருக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் எப்படி வந்தது என்றால் அவருடைய சிறு வயதில் அனைவரும் படகில் சென்றுகொண்டிருக்கும் போது காவேரி ஆற்றில் தவறி விழுந்துவிடுவார்கள், அப்பொழுது அவரை காவேரி தாய் தான் காப்பாற்றுமாம், இந்த காவேரி ஆற்றுக்கு இன்னொரு பெயரும் உள்ளது. அது தான் பொன்னிநதி, பொன்னிநதியே அவரை காப்பாற்றியதால் அவருக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் வந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஊமை ராணி யார்?? நந்தினி தந்தை சுந்தர சோழனா? வீரபாண்டியனா? குழப்பமா இருக்கா அப்போ இதைபடிங்க!

சுந்தர சோழனின் மூன்று பிள்ளைகளின் குடும்ப உறவுகள், எதிரிகளின் ஆலோசனை, சண்டைகள் போன்றவற்றை தான் இந்த கதை முழுவது சொல்லிருப்பார்கள். இவை அனைத்திலும் வந்தியத் தேவன் தான் கூட வருவான். இதுதான் இந்த கதை சுருக்கம், இவற்றில் சுந்திர சோழன் தஞ்சையில் இருப்பார், ஆதித்த கரிகாலன் காஞ்சியில் இருப்பார், குந்தவை பழையாறையில் இருப்பார், அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் செய்து அங்கு நாடுகளை கைப்பற்றுவர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், யார் சதி திட்டத்தை திட்டியது, யார் போரில் வென்று தஞ்சையை ஆண்டது என்பது குறித்த கதைதான் இந்த கதை முழுவதும் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதித்த கரிகாலனை கொன்றது யார்..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement