வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் திருக்குறள் கதைகள்

Updated On: March 27, 2025 5:51 PM
Follow Us:
thirukkural kathaigal gnalam karuthinum kaikoodum in tamil
---Advertisement---
Advertisement

திருக்குறள் கதைகள் 

நம்மில் அனைவருக்கும் கதைகேட்பது என்பது மிகவும் பிடித்த செயல். குழந்தைகளுக்கு கதைகூறினால் கேட்பார்கள். அதுவே நீங்கள் ஒரு அறிவுரை கூறினால் கண்டிப்பாக கேட்கமாட்டார்கள். அது அவர்களின் சுபாவம். எந்த ஒரு விசயத்தையும் செய்துபார்க்க துடிக்கும் ஆர்வம். அதை நம்மை தடுப்பது கடினம். அதுவே ஒரு கருத்தை கதை மூலமாக அவர்களுக்கு கூறினால், அவர்கள் மனதில் அந்த கதையை திருப்ப திருப்ப யோசித்து அவற்றில் நன்மை எது தீமை எது, என்று அறிந்துகொள்ள கண்டிப்பாக திருக்குறள் கதைகள் உதவும்.

திருக்குறள் கதைகள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. அப்படி நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் கருத்துக்களை கதையாக உங்களுக்கு எங்கள் பொதுநலம் தளத்தின் வாயிலாக வழங்குகிறோம். அந்தவகையில் இன்று ஞாலம் கருத்தின் கைகூடும் காலம் திருக்குறள் கதை உங்களுக்காக….

thirukkural kathaigal gnalam karuthinum kaikoodum in tamil:

திருக்குறள் எண் – 484
இயல் – அரசியல்
அதிகாரம் – காலமறிதல்

திருக்குறள்:

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

திருக்குறள் பொருள்:

ஒரு செயலை செய்யும்போது உரிய காலத்தையும் அதற்கான இடத்தையும் ஆராய்ந்து செயல்பட்டால் உலகத்தைகூடக் கைக்குள் கொண்டு வந்துவிடலாம்.

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

திருக்குறள் கதைகள்:

ஒரு கிராமத்தில், மலைச்சாமி என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். நல்ல உழைப்பாளி, ஆனால் அவனுக்கென்று சொந்தநிலம் ஏதும் கிடையாது என்பதனால் மாதையன் என்ற செல்வந்தனின் நிலத்தைக் குத்தகைக்குக் எடுத்து விவசாயம் செய்து வந்தான்.

மாதையன் விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டுவதையை குறிக்கோளாக கொண்டு இருந்தான். இருந்த போதிலும் மலைச்சாமி மற்ற விவசாயிகள் போல் அல்லாமல் நேர்மையானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்ததால் செல்வந்தனிடம் ஏமாறவில்லை.

ஒவ்வொரு முறையும் செல்வந்தன் மலைசாமியை ஏமாற்ற முடியவில்லை என்று கவலை கொண்டான். மலைச்சாமியை எப்படியும் ஏமாற்ற வேண்டும் என்று யோசித்து, மலைச்சாமியிடம் குத்தகைக்கு ஈடாக “மண்ணுக்கு மேலே விளைபவை எனக்கு, மண்ணுக்குக் கீழே விளைபவை உனக்கு” என்று கட்டளையிட்டான். புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு நிலக்கடலை பயிரிட்டதால் விவசாயிக்கே இலாபம் கிட்டியது.

ஏமாற்றமடைந்த செல்வந்தன் அடுத்தமுறை விவசாயியை ஏமாற்ற எண்ணி நிபந்தனையை மாற்றினான். இம்முறை “மண்ணுக்குக் கீழே விளைபவை எனக்கு, மண்ணுக்கு மேலே விளைபவை உனக்கு” என்றான். இம்முறை மலைச்சாமி நெல் பயிரிட்டான். இம்முறையும் விவசாயிக்கே இலாபம் ஏற்பட்டது.

thirukkural kathaigal gnalam karuthinum kaikoodum in tamil

ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் செல்வந்தன்.

அதனால் எவ்விடத்து எதை, எப்படி, எக்காலத்தில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து மலைச்சாமி போல் செய்தால் உலகையே வென்று விடலாம்.

திருக்குறள் கதை “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண”

கதை நீதி:

ஒரு செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் நம் செயலுக்கு வெற்றியுண்டு.

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now