திருக்குறள் கதை “தீய நட்பு”

Advertisement

Thirukkural short story 

திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக விளங்குகிறது. இந்த நூலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாக கூறப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் ஒன்று இரண்டு குறள் அல்ல, மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விளக்கங்கள் நாம் வாழ்வியலோடு அனைத்து சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது. ஒவ்வொரு குறளும் ஒரு அர்த்தத்தை நமக்கு வழங்குகிறது அந்த வகையில் இன்று தீயவர் நட்பை எவ்வாறு கண்டறிவது என்று திருக்குறள் கதை மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

திருக்குறள்: 811           அதிகாரம்: தீ நட்பு 

“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.”

திருக்குறள் பொருள்:

அன்பு மிகுதியால் பழகுவோர் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

Thirukkural short story:

தந்திர நரி 

அடர்த்த காட்டில் சிங்கம் ஒன்று மானை துரத்திக்கொண்டு இருந்தது, ஆனால் மான் அந்த சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் வேகமாக ஓடி எப்படியோ தப்பித்தது.

thanthira nari

சிங்கம் இரை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தான் இருப்பிடத்திற்கு திருப்பியது. மான் சிங்கத்திடம் இருந்து தப்பித்து ஓடியபோது உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு  விழுந்தது.

thirukkural kathai

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நரி அந்த மானை எப்படியாவது உண்ணவேண்டும் என்று நினைத்தது. ஏற்கனவே சிங்கத்திடம் இருந்து தப்பித்த மான் உடல் களைத்து இருந்தாலும் நாம் அருகில் சென்றால் அது மீண்டும் ஒட முயற்சிக்கும். அது நமக்கு சரிவராது என்று யோசித்த நரி, மானிடம் அன்பாக பேசி நம்பவைத்து அதனை உண்ண வேண்டும் என்று தந்திரமாக எண்ணியது.

திருக்குறள் கதை “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண”

தொலைவிலிருந்தே நரி, மானிடம் அதற்கு எவ்வாறு அடிப்பட்டது, உனக்கு நான் ஏதேனும் உதவி செய்யவா, என்று அன்பாக பேசிக்கொண்டே மானின் அருகில் வந்தது. மானும் தனக்கு உதவிச்செய்ய ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில் நரியை முழுமையாக நம்பி தன்னை தூக்கிவிடு என்று கூறியுடனே நரி மானை தாக்க ஆரம்பித்தது. இறுதியில் மான் இறந்து நரிக்கு இரையானது. தன் பசியை தீர்த்துக்கொண்டது நரி. அன்புச்செலுத்துவது போல் நடித்து தனது தீயெண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டது.

திருக்குறள் நீதி கதைகள்

நீதி:

தீய எண்ணம் கொண்ட ஒருவர், உங்கள் மீது அதிக அன்பு செலுத்தினால் அவர்களிடம் இருந்து தள்ளியிருப்பதே சிறந்தது.

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story
Advertisement