ஃபோனை ஃப்ளைட் மோடில் போட்டால் இதெல்லாம் பண்ணலாமா..?

Advertisement

Airplane Mode Advantages in Tamil

இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் ஒரு இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. ஸ்மார்ட் போன் இல்லையெனில் இவ்வுலகில் மனிதர்கள் இயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன் மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் பயனர்கள் விரும்பக்கூடிய பல ஆப்ஷன்கள் உள்ளது. அப்படி இருக்கும் ஆப்ஷன்களில் ஃப்ளைட் மோட் ஆப்சனும் ஒன்று. இதனை பெரும்பாலும் யாரும் பயன்படுத்த மாட்டர்கள். ஆனால், ஃப்ளைட் மோட் ஆனால் இருந்தால், போனிற்கு பல நன்மைகள் கிடைக்கிறது. ஆகையால், ஃபோனை ஃப்ளைட் மோடில் போட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஃப்ளைட் மோட் என்பது, ஆஃப்லைன் முறை என்றே கூறப்படுகிறது. இது அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதையோ பெறுவதையோ தடுக்கிறது. எனவே, இவற்றின் மேலும், பயன்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Benefits of Airplane Mode in Tamil:

benefits of airplane mode in tamil

வேகமாக சார்ஜ் செய்வதற்கு:

ஃபோனில் ஃப்ளைட் மோடை ஆன் செய்து சார்ஜ் செய்தால், வழக்கமாக சார்ஜ் ஆவதைவிட வேகமாக சார்ஜ் ஆகிறது. அதாவது, இது மொபைலின் பல வயர்லெஸ் இணைப்புகளை தடுத்து வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது. ஆகையால், வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நேரத்தில் நீங்கள் ஃப்ளைட் மோடை பயன்படுத்தலாம்.

பேட்டரியை சேமிக்க:

நீங்கள் பயணம் செய்யும் நேரத்திலும் சார்ஜ் கம்மியமாக இருக்கும் நேரத்திலும் போனை ஃப்ளைட் மோடில் போடுவதன் மூலம் பேட்டரியை சேமிக்கலாம். அதுமட்டுமில்லாமல், போனை நீண்ட நேரம் உபயோகத்திலும் வைத்து கொள்ளலாம்.

பாதுகாப்பாக இருக்க:

சில இடங்களில் வயர்லெஸ் இணைப்புகளை பயன்படுத்தக்கூடாது. அதாவது, மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பேங்க் போன்ற இடங்களில் வயர்லெஸ் இணைப்புகளை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், சாதனத்திலிருந்து வரும் தேவையற்ற சிக்னல்கள் சென்சிடிவ் சாதனங்களை பாதிக்க வாய்ப்புள்ளதால் அத்தகைய சூழ்நிலையில் ஃப்ளைட் மோட் பயன்படுத்துவது அவசியம்.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வழி காட்டும் அய்யன் ஆப்

நெட்வொர்க் பிரச்னை தீர:

சில நேரங்களில் நெட்வொர்க் சரியாக கிடைக்காமல் இருக்கும். இதனை சரிசெய்ய ஃப்ளைட் மோட் உதவுகிறது. அதாவது, Wi-Fi, Bluetooth, செல்லுலார் நெட்வொர்க் மோடம்களை Reset செய்து நெட்வொர்க் பிரச்னையை போக்குகிறது.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

யூடுபில் வீடியோ அப்லோடு செய்வது எப்படி.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement