How to Create QR Code For Location in Tamil
வணக்கம் நண்பர்களே. இந்த நவீன காலகட்டத்தில் நமக்கு பயன்படும் பல தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்கள் இருக்கிறது. அப்படி நமக்கு மிகவும் பயன்படுவது QR Code. இதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதாவது, அணைத்து விதமான இடங்களிலும் QR Code பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தேவையை சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை. அந்த அளவிற்கு QR Code -ன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், QR Code மூலம் Location விவரங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
பொதுவாக, பத்திரிகையில் கல்யாண மண்டபத்தின் முகவரி போடப்பட்டிருக்கும். அதனை வைத்தே உறவினர்கள் கல்யாணத்திற்கு வருவார்கள். அனல், இந்த நவீன காலத்தில் அதற்கு மாறாக பத்திரிகையில் கல்யாண மண்டபத்திற்கான Location -ஐ QR Code மூலம் அறிந்து கொள்ளலாம். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
How To Create QR Code For Invitation in Tamil:
முதலில், உங்கள் ஸ்மார்ட் போனில் Play Store -க்கு செல்லுங்கள்.
அப்பக்கத்தில் Search பகுதியில் QRKY என்பதை டைப் செய்து கொள்ளுங்கள்.
QRKY QR Code Generator என்ற ஆப் Show ஆகும். அந்த ஆப்பினை Download செய்து கொள்ளுங்கள்.
Download செய்த பிறகு, அந்த ஆப்பில் QR CODE டைப் கொடுத்திருக்கும். அதாவது, Website, TEXT, EVENTS, LOCATION இதுபோன்ற பல ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் உங்களுக்கு தேவையான LOCATION என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் Location -னுக்கான QR Code தான் கிரேட் செய்ய போகிறீர்கள்.
LOCATION என்பதை கிளிக் செய்து உள்ளே சென்றதும், அப்பக்கத்தில் Location என்பதில் திருமண மணடபத்திற்கான Loacation -ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது, Loacation ஐகான் ஓபன் ஆகும் அதில் Generate என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, LOCATION -னுக்கான QR CODE Generate ஆகி இருக்கும். அதில் MORE OPTION என்பதை கிளிக் செய்து SAVE TO GALLERY கொடுத்துக்கொள்ளுங்கள். அல்லது, நேரடியாக பத்திரிகை பிரிண்ட் செய்யும் இடத்திற்கு ஷேர் செய்யலாம். அவ்வளவு தாங்க மிகவும் எளிமையான முறையில் பத்திரிகையில் Location -னுக்கான QR Code கிரேட் செய்து கொள்ளலாம்.
இதுபோன்று, நீங்கள் எந்தவிதமான Invitation -னிலும் LOCATION னுக்கான QR CODE -யை உருவாக்கிக்கொள்ளலாம்.
Voter ID Card ஆன்லைனில் Download செய்வது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |