Pongal Wishes in Tamil Stickers for Whatsapp
ஏதாவது ஒரு பண்டிகை அல்லது சிறப்பு தினங்கள் வந்துவிட்டாலே நமக்கு நம்மை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அப்படி உருவாகும் மகிழ்ச்சியை நாம் நம்மிடமே வைத்து கொள்ளாமல் மற்றவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுவோம். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதனால் அனைவருமே தங்களது வாழ்த்துக்களை WhatsApp மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் அப்படி நாம் வாழ்த்து தெரிவிக்கும் முறையில் கூட ஏதாவது ஒரு புதுமை தன்மை இருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு உங்களது வாழ்த்துக்களை WhatsApp ஸ்டிக்கர் மூலம் எவ்வாறு பகிருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
புதிய பொங்கல் WhatsApp ஸ்டிக்கர்ஸ்:
கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு அறிமுகம் செய்தது போல் WhatsApp ஆனது எந்த ஒரு பொங்கல் ஸ்டிக்கர்ஸ்களையும் அறிமுகம் செய்யவில்லை. ஆனாலும் நம்மால் பொங்கல் வாழ்த்து ஸ்டிக்கர்ஸ்களை பகிர்ந்து கொள்ள முடியும். அது எப்படி என்றால் அதற்கு நீங்கள் சில மூன்றாம் தரப்பு ஆப்களை டவுன்லோட் செய்யவேண்டி இருக்கும்.
பொதுவாக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் கூகுளை பிளே ஸ்டோரில் பொங்கல் Whatsapp Stickers என்று டைப் செய்தால் நிறைய பொங்கல் Whatsapp Stickers ஆப்களை நீங்கள் பெறலாம். இந்த ஆப்கள் உங்களுக்கு பலவகையான பொங்கல் Whatsapp Stickers-களை அளிக்கும்.
அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்து அதில் உள்ள பொங்கல் வாழ்த்து Stickers-களை டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழலாம்.
இந்த ஆப்களை டவுன்லோட் செய்வதற்கு முன்னால் ஆப் சார்ந்த டெவலப்பர் மற்றும் ரீவ்யூ ஆகியவற்றை கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும். இத்தகைய ஆப்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்காது.
அதனால் ஆப்பிள் மற்றும் ஐபோன் பயனாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் நண்பர்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
பொங்கல் Whatsapp Stickers-களை டவுன்லோட் செய்து அனுப்புவது எப்படி..?
- முதலில் உங்களது WhatsApp-ஐ திறந்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது நீங்கள் பொங்கல் வாழ்த்து கூற விரும்பும் Contact Chat-ற்குள் செல்லவும்.
- இப்பொழுது அதில் உள்ள GIF என்பதற்கு அருகில் உள்ள Square வடிவிலான ஐகானை Click செய்யவும்.
- அங்கு உங்களிடம் உள்ள இருக்கும் அனைத்து Stickers-கள் இருக்கும். அத்துடனே நீங்கள் தற்பொழுது டவுன்லோடு செய்த Stickers-களும் இருக்கும். மேலும் உங்களுக்கு கூடுதல் ஸ்டிக்கர்ஸ் வேண்டும் என்றால் அங்கு உள்ள “+” என்பதை Click செய்யவும்.
- இப்பொழுது உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு ஸ்டிக்கர் பேக்கை தேர்வு செய்து அதன் அருகில் உள்ள டவுன்லோடு ஐக்கானை கிளிக் செய்யுங்க அது உங்களுது My Stickers-ல் இருக்கும். அதனை உங்களது நண்பர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
போனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |