Lollipop News in Tamil
நண்பர்களே நமக்கு ரொம்ப நாளாக தெரியாத விஷயத்தை பற்றி தான் இந்த பதிவு. அதாவது கடையில் விற்கும் லாலிபாப் கவரின் பின் பக்கம் இருக்கும் செய்தி நமக்கு என்ன சொல்கிறது என்பதை பற்றி தான். அதேபோல் லாலிபாப் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா..?பொதுவாக குழந்தைகளை கடைகளுக்கு அழைத்து சென்றால், அங்கு அவர்களின் கண்களுக்கு ஆயிரம் பொருட்கள் இருந்தாலும் அனைத்தையும் கேட்கும் குணம் தான் குழந்தைகளுக்கு. அப்போது தான் அது குழந்தையே..! அதுபோல் முக்கியமாக சொல்லபோனால் ஆயிரம் பொருட்கள் இருந்தாலும் ஒரு பொருளை கட்டாயம் வாங்கி கொடுக்க சொல்லும் பொருட்களில் ஒன்று தான் இந்த லாலிபாப் ஆகும். இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா..? சரி வாங்க அந்த கவரில் இருக்கும் செய்தியை படிப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Can We Give Kids Lollipop in Tamil:
சில வகையான பிராண்ட்களில் மேல் இருக்கும் சிறிய ஓட்டைகளை வைத்து தான் வடிவமைப்பார்கள். அந்த ஓட்டை எதற்கு என்றால் அந்த ஓட்டையுடன் அந்த Candy சென்று உருகிக் கொள்ளும். அது மட்டும் உருகினால் பரவாயில்லை அது அந்த பிளாஷ்டிக் குச்சியுடன் சேர்ந்து உருகிக்கொள்ளும். அப்படி உருகாமல் இருந்தால் அது ஈசியாக கழண்டு வரும். அது அப்படியே குழந்தையின் தொடையில் மாட்டிக்கொள்ளும்.அப்படி அது தொண்டையில் மாட்டிக்கொண்டால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும். உயிர் போகும் அபாயம் கூட ஏற்படும். அது மாதிரி நிறைய சம்பங்களும் நடந்துள்ளது.
அதனால் லாலிபாப் கவரில் Choking Hazard Not Recommended For Children For 5 Years என்று அச்சிடப்பட்டு விற்கப்படுகிறது. அதாவது 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை என்று அர்த்தம் ஆகும்.
காரில் உள்ள Airbag-ற்கு காற்று எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |