காரில் உள்ள Airbag-ற்கு காற்று எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா..?

Advertisement

Car Airbag Knows Where The Air Comes From

நம் முன்னோர்கள் காலத்தில் ஒரு வீட்டில் சைக்கிள் இருக்கிறது என்றாலே அது மிகவும் ஆச்சரியப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இப்படி சைக்கிளில் பயணம் செய்வதும் நம்முடைய உடலுக்கு ஏதோ ஒரு வகையில் ஆரோக்கிய நன்மையினை அளிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நவீன காலத்தில் இதற்கு எதிர்மாறாக அனைத்து வீடுகளிலும் பைக் மற்றும் கார் என ஆகியவற்றை தான் உபயோகப்படுத்த படுகிறது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் காரில் என்ன தான் நிறைய விஷயங்கள் இருந்தாலும் கூட அதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. அதாவது ஒவ்வொரு காரிலும் Airbag என்பது கட்டாயமாக உள்ளது. இந்த Airbag ஆனது காரில் நாம் செல்லும் போது ஏதேனும் விபத்துகள் நேரிடும் போதும் வரும் வசதியாக உள்ளது. ஆனால் இதில் நம்மை ஆச்சரியப்படுத்தில் சிந்தனைக்கு உட்படுத்தும் ஒரு விஷயமும் உள்ளது. அதாவது காரில் உள்ள Airbag-ற்கு காற்று எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா..? ஒருவேளை இதற்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இன்னும் சில நிமிடங்களில் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காரில் உள்ள Airbag-ற்கு காற்று எங்கிருந்து வருகிறது:

 கார் ஏர் பேக்

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பேருந்து, பைக், கார், விமானம் மற்றும் ரயில் என எண்ணற்ற வசதிகள் உள்ளது. இத்தகைய வசதிகளில் எது ஒருவருக்கு ஏற்றதாக உள்ளதோ அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

அவ்வாறு நாம் பயன்படுத்தும் வாகனங்களில் காரும் ஒன்று. காரில் நிறைய வகைகள் மற்றும் நிறங்கள் அதனுடைய விலைவாசிக்கு ஏற்றவாறு இருக்கிறது.

இத்தகைய ஒவ்வொரு காரிலும் கதவு, சீட் பெல்ட், இன்ஜின் மற்றும் இதர சில பொருட்கள் அனைத்தும் பொதுவான ஒன்றாக உள்ளது. இந்த வரிசையில் காரில் Airbag இருப்பதும் இயல்பான ஒன்று.

இந்த Airbag ஆனது நாம் காரில் பயணம் செய்யும் போது திடீரென விபத்துக்கள் ஏற்படும் போது தோன்றும். இவ்வாறு காரில் இடம் பெற்றுள்ள Airbag-ற்கு காற்று எங்கிருந்து வருகிறது தெரியுமா..?

அதாவது நாம் பயன்படுத்து காரின் முன்பக்கம் Crash Sensor என்ற சென்சார் வைக்கப்பட்டிருக்கும். இந்த சென்சார் ஆனது ஒரு கார் 16 கிலோ மீட்டர் முதல் 24 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக அதனுடைய வேகத்தில் ஏதேனும் தடை ஏற்படுவதனை விபத்து ஏற்பட்டு இருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்கிறது.

மேலும் இத்தகைய நிகழ்விற்கு பிறகு அதில் ஒரு சிறப்பு தன்மை வாய்ந்த Mechanical System ஆனது உடனே செயல்பட்டு Inflator System என்ற ஒரு வகையான அமைப்பிறகு 12 v மின்சாரத்தை சென்றடைய செய்கிறது. அதாவது Potassium Nitrate மற்றும் Sodium Azide இரண்டும் கலந்த ஒன்றாக இந்த Inflator System இருப்பதால் இதனை 12 v மின்சாரம் வந்தடைந்தவுடன் Ignate செய்யப்பட்டு ஒரு நிகழ்வு ஒன்று ஏற்படுகிறது.

 இத்தகைய நிகழ்வின் காரணமாக Potassium Nitrate மற்றும் Sodium Azide இரண்டும் உடனடியாக வினைபுரிந்து நைட்ரஜன் வாயுவை Airbag-ற்கு சென்றடைய செய்கிறது. இவ்வாறு தான் காரில் உள்ள Airbag ஆனது 3 முதல் 10 வினாடிக்குள் உப்புகிறது. மேலும் Airbag-கில் இருப்பது காற்று கிடையாது அது ஒரு நைட்ரஜன் வாயு ஆகும். 

ஆகவே காரில் உள்ள Airbag-ற்கு இவ்வாறு தான் காற்று வருகிறது.

இதையும் படியுங்கள்⇒ கண்களை நாம் மூடும் போது தோன்றும் நிறம் என்ன தெரியுமா.. 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement