புன்னை மரம் எப்படி இருக்குமுன்னு உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

புன்னை மரம் எப்படி இருக்கும்

பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மரத்தை வளர்ப்போம், அதுவும் பயனுள்ள மரத்தை தான் பார்த்து பார்த்து வளர்ப்போம். சில மரங்கள் தானாகவே வளர கூடியதாகவும் இருக்கிறது. அதிகமாக தென்னை மரம், மாமரம், புளியமரம் இன்னும் பல மரங்களை தெரிந்திருக்கும். இந்த மரங்கள் எல்லாம் நம் வீட்டில் அல்லது நாம் வெளியில் செல்லும் போது பார்த்திருப்போம்.

அதுவே முதல் தடவை அல்லது நீங்கள் பார்க்காத மரத்தின் பெயரை யாரும் சொன்னால் என்ன மரம் அது நான் பார்த்ததில்லை என்று கூறுவோம். அதன் பிறகு அந்த மரம் எப்படி இருக்கும் என்று மொபைலில் சர்ச் செய்து பார்ப்போம் அல்லவா.! அந்த வகையில் இன்றைய பதிவில் புண்ணை மரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

புன்னை மரம் பற்றிய தகவல்:

புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது. இந்த மரமானது எல்லா வகை மண்களிலும் வளர கூடியது. இந்த மரத்தை பெரும்பாலும் அழகிற்காக சளி யோரங்களில் நடப்படுகிறது.

இந்த மரத்தின் நிழலில்  அமர்ந்திருந்தால் மலர்களின் வாசனையானது நம்மி புத்துணர்ச்சி பெற செய்கிறது. இந்த மரத்தினுடைய சிறப்பு என்னவென்றால் கடும் வெயிலில் கூட இலைகள் வாடாமல் பசுமையாக காட்சியளிக்க கூடியது.

என்னது மனுஷனோட DNA -வும் இந்த பழத்தோட DNA -வும் ஒரே மாதிரி இருக்கா.. அது என்ன பழம் தெரியுமா

இந்த மரம் வருடம் முழுவதும் பசுமையாகவும், கண்களை கவரும் வகையில் இருப்பதால் சாலையோரங்களில் நடப்படுகிறது.

மழை வரப்போவதை உணரலாம்:

புன்னை மரம் எப்படி இருக்கும்

இந்த மரத்தில் உள்ள பூக்களானது அதிகமாக பூத்திருந்தால் மழை வர போகிறது என்று கிராமத்தில் கணிப்பார்கள். அதிகமான காற்று ஏன் புயல் அடித்தால் கூட சாயாத மரமாகவும் இருக்கிறது. மேலும் இதில் பூச்சி மற்றும் கரையான் வராது என்பதால் படகுகள் கட்டவும், வீட்டிற்கு பயனுள்ள பொருட்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.

நன்மைகள்:

கண் எரிசிகள் தன்மையுடன் இருந்தால் புன்னை இலைகளை சிறிது நேரம்  தண்ணீரில் போட்டு இந்த தண்ணீரில் கண்ணை கழுவினால் கண்களில் எரிச்சல் சரியாகும்.

புன்னை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி பிரச்சனை குணமாகும்.

புன்னை இலைகளை அரைத்து சொறி சிரங்கில் மீது தடவினால் சொறி சிரங்கு சரியாகும்.

ஜீன்ஸ் பேண்ட்ல இந்த பாக்கெட் ஏன் இருக்குனு தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement