Why Are The f and j Keys Underlined
பலருக்கும் நம்மை சுற்றி உள்ள விஷயங்களில் ஏதவாது தவறுகள் நேர்ந்தால் அதனை சுட்டி காட்டும் குணம் இருக்கும். அதே போல நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டு என்ற எண்ணம் இருக்கும். இன்றைய காலத்தில் கணினியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
கணினியில் உள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் keyboard-லில் கவனித்திருப்பீர்கள், அதாவது f மற்றும் j எழுத்துக்கு கீழே கோடுகள் இருப்பதை கவனித்திருப்பீர்கள். இவை ஏன் உள்ளது என்று அறிந்திருக்கமாட்டீர்கள். அதனால் தான் இந்த பதிவில் அதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம்.
keyboard-லில் இருக்கும் இரண்டு கோடுகள் எதற்காக உள்ளது:
இன்றைய காலத்தில் எல்லாமே கணினி காலமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். சின்ன கடை முதல் ஹோட்டல் வரை அனைத்து இடத்திலும் கணினியை பயன்படுத்துகிறார்கள். கணினி இருப்பதன் மூலம் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கு உதவுகிறது.
இதில் நாம் வேலை செய்வதற்கு மவுஸ் மற்றும் keyboard அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த keyboard-லில் F மற்றும் J எழுத்தில் மட்டும் கீழே இரண்டு கோடுகள் உள்ளதை பார்த்திருப்பீர்கள்.
ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா
Keyboard-லில் ஐந்து வரிசைகள் கொண்டதாக இருக்கிறது, அதில் உள்ள நடுவில் இருக்கும் A வரிசையானது முகப்பு வரிசை என்று அழைக்கப்படுகிறது. இதில் நாம் டைப் பண்ணும் போது நடுவரிசையில் கையை வைத்து கொண்டு தான் மற்ற எழுத்துகளை டைப் செய்வதற்கு ஈசியாக இருக்கும்.
நிறைய நபர்கள் Keyboard-யை பார்க்காமல் டைப் செய்வதை பாத்திருப்பீர்கள். இந்த கோடுகள் இருப்பதனால் மற்ற எழுத்துக்கள் எங்கு இருக்கும் என்பதை அறிந்து கொண்டு பார்க்காமல் டைப் செய்வதற்கு ஈசியாக இருக்கும் என்பதால் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண் தெரியாதவர்களும் keyboard-லில் டைப் செய்வதற்காக F மற்றும் J எழுத்தில் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சுவாரசியமான தகவலை அறிந்து கொள்வதற்கு நமது தளத்தை பின்தொடர்ந்து கொண்டே இருங்கள்.
சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சூரியன் சிவப்பு நிறமாக இருக்கிறதே ஏன்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |