ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா..?

Advertisement

Why Railway Station Board Yellow Colour

பொதுவாக பஸ், ரயில், விமானம், கார் மற்றும் ஸ்கூட்டி என இதுபோன்ற முறைகளில் தான் பயணம் செய்வார்கள். அந்த வகையில் இத்தகைய முறையில் பயணம் செய்தாலும் கூட நாம் செல்ல வேண்டிய இடத்தினை பொறுத்து அதனுடைய வழிகள் வேறுப்பட்டு காணப்படும். அந்த வகையில் சாலையில் வெள்ளை நிற கோடுகள், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற சிக்னல்கள் என இவற்றை அனைத்தினையும் பார்த்து இருப்போம். இத்தகைய வரிசையில் ரயில்வே ஸ்டேஷனில் மஞ்சள் நிற போர்டும் இருப்பதை கவனித்து இருப்பீர்கள். ஆனால் இவ்வாறு வெவ்வேறு முறையில் இருப்பதற்கான காரணம் என்ன என்று பலருக்கும் தெரிந்து இருக்காது. எனவே இதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக காணலாம் வாங்க..!

ரயில்வே ஸ்டேஷனில் மஞ்சள் நிற போர்டு இருக்க காரணம் என்ன..?

நாம் அனைவரும் ரயில் பயணம் மேற்கொண்டிருப்போம். அவ்வ போது அங்கு உள்ள ரயில், நடைப்பாதை, டிக்கெட் வாங்கும் இடம் மற்றும் தண்டவாளம் என இவற்றை எல்லாம் பார்த்து இருப்போம்.

railway station yellow board reason in tamil

அந்த வகையில் இவற்றில் நமக்கு எதுவும் அவ்வளவாக சிந்திக்க தோன்றாது. ஆனால் சிந்திக்க வைக்கும் படி அங்கு உள்ள போர்ட் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஏன் ரயில்வே ஸ்டேஷனில் மஞ்சள் நிற போர்ட் இருக்கிறது என்றால்..?

மஞ்சள் நிறத்தை பொறுத்தவரை நன்றாக பிரகாசம் அளிக்கக்கூடிய ஒரு நிறமாக இருக்கிறது. ஆகையால் இந்த மஞ்சள் நிறத்தின் பக்கவாட்டு தன்மையினை குறிக்கிறது.

ஆகையால் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள போர்டிற்கு இந்த நிறத்தினை அடிப்பதன் மூலம் ரயில் ஓட்டுனருக்கு ரயில் எவ்வளவு தூரத்தில் இருந்து வந்தாலும் இந்த மஞ்சள் நிறம் பிரசாகமாக தெரியும். மேலும் பனிக்காலம், மழைக்காலம் என இதுபோன்ற நேரங்களில் மஞ்சள் நன்றாக தெரியும்.

அதோடு மட்டும் இல்லாமல் அதில் எழுதப்பட்டுள்ள கருப்பு நிறமானது, மஞ்சள் நிறத்திற்கு எதிரான நிறத்தை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற காரணத்தினாலே ரயில்வே ஸ்டேஷன் போர்டில் இந்த நிறம் அடிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement