Gas Cylinder A B C D Meaning in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் விறகு அடுப்பை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் விறகு அடுப்பு சில கிராமங்களில் தான் பயன்பாட்டில் இருக்கிறது. ஏனென்றால் கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு என்று வசதிகளுக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் இதனை பயன்படுத்தும் போது சமைப்பதற்கான நேரம் குறைகின்றது. அதனால் பலரும் இதனை பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பு பயன்படுத்தினால் முக்கியமாக இருப்பது சிலிண்டர் தான்.
இந்த சிலிண்டரில் A, B, C, D போன்ற எழுத்துக்கள் போட்டு அதன் பக்கத்தில் நம்பர்போட்டிருப்பார்கள். அவை எதனை குறிக்கிறது என்று பலரும் சிந்திப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் இந்த நம்பர்கள் எதனை குறிக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
A,B,C,D என்பது எதனை குறிக்கிறது:
கேஸ் சிலிண்டரில் இருக்கும் A,B,C,D எழுத்துக்களானது ஆங்கில மாதத்தை குறிக்கிறது. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு ஆங்கில மாதத்தை குறிக்கிறது. அதை பற்றி காண்போம்
A- ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை குறிக்கிறது.
B- ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை குறிக்கிறது.
C- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களை குறிக்கிறது.
D- அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தை குறிக்கிறது.
நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா
எண்கள் எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது:
- கேஸ் சிலிண்டரில் ஆங்கில எழுத்துக்கள் பக்கத்தில் 2 நம்பர்கள் எழுதப்பட்டிருக்கும். அவை எதற்காக என்று காண்போம்.
- இந்த எண்களானது வருடங்களை குறிக்கிறது. இதை ஒரு எடுத்துக்காட்டுடன் காண்போம் வாங்க..
- A-13 என்று எழுதியுள்ளது என்று வைத்து கொள்வோம் அப்படியென்றால் A என்பது மாதங்களை குறிக்கும், அப்போ மார்ச் மாதம் 2013- ஆண்டிற்குள் காலாவதி ஆகிவிடும் என்று அர்த்தமாகும்.
- B-15 என்றால் ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்டிற்குள் காலாவதியாகிவிடும் என்பதை குறிக்கிறது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |