நாம் ஏன் இடது கையில் வாட்ச் கட்டுறோம்னு தெரியுமா.? இதுதான் காரணம்..!

Advertisement

Why Do We Wear a Watch on The Left Hand in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், நாம் ஏன் இடது கையில் வாட்ச் கட்டுறோம் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ச்  காட்டுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் இடது கையில் தான் வாட்ச் கட்டுவார்கள். ஒரு சிலர் மட்டுமே வலது கையில் வாட்ச் கட்டுவார்கள். ஏன் அனைவரும் இடது கையில் வாட்ச் கட்டுறோம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா.? அப்படி யோசித்து இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நேரம் தான் இந்த உலகிலேயே விலைமதிப்பற்ற ஒன்று. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடியும் மிகவும் விலைமதிப்பற்றது. போன நேரத்தை நாம் திரும்ப பெற முடியாது. இதனால், இவ்வுலகில் ஒவ்வொன்றுமே நேரத்தை அடிப்படையாக வைத்து தான் செயல்படுகிறது. அந்த நேரத்தை நாம் பார்ப்பதாக கைக்கடிகாரம் கட்டுகிறோம். அப்படி கையில் வாட்ச் கட்டும்போது ஏன் இடது கையில் மட்டும் கட்டுகிறோம்..?

ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை.. காரணம் தெரியுமா..

இடது கையில் வாட்ச் கட்டுவதற்கான காரணம் | Why Do People Wear a Watch on the Left Hand in Tamil:

Why Do We Wear a Watch on The Left Hand in Tamil

பெரும்பாலும் நாம் அனைவரும் வலது கையில் அதிகம் வேலை செய்வோம். வலது காய் அடிக்கடி வேலை செய்வதால் இடது கையில் வாட்ச் கட்டுகிறார்கள். வலது கையில் வாட்ச் கட்டினால் நேரம் பார்ப்பதற்கும் வாட்ச் முள்ளை சரி செய்வதற்கும் சிக்கலாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வலது கையில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலை செய்தால் தவறுதலாக வாட்ச் கீழே விழவும் வாய்ப்புள்ளது. இதுவே இடது கையில் கட்டினால் வாட்ச் பாதுக்காப்பாக இருக்கும்.

பெரும்பாலான நிறுவனங்கள், இடது கையை மனதில் வைத்து கடிகாரங்களைத் தயாரிக்க இதுவே காரணம் ஆகும்.

இதையே நாம் அறிவியல் ரீதியாக பார்த்தால் நாம் அனைத்தயும் வலது கையால் செய்து பழகி விட்டோம். அதேபோல், வாட்ச் முட்களையும் வலது கையால் தான் சரி செய்வோம். அப்போது கடிகாரம் இடது கையில் கட்டி இருந்தால் தான் சரியாக இருக்கும். மறுபுறம், நீங்கள் வலது கையில் கடிகாரம் கட்டினால் வாட்ச் முள் சரி செய்வது உள்நோக்கிய இருக்கும். இதனால்  சரிசெய்வது கடினமாக இருக்கும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement