Why Is The Mona Lisa So Famous in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. எங்கள் பதிவில் தினமும் ஒரு சுவாரஸ்யமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக மிகவும் பிரபலமான மோனலிசா ஓவியத்திற்கு பின் இருக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ளாலாம் வாங்க..!
திருமண விழாக்களில் ஆண்கள் மட்டும் ஏன் பரிமாறுகிறார்கள் தெரியுமா
மோனலிசா ஓவியத்திற்கு பின் இப்படி ஒரு ரகசியமா..?
பொதுவாக நாம் அனைவருமே மோனலிசா ஓவியத்தை பார்த்திருப்போம். இந்த மோனலிசா ஓவியம் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும்.
சரி இந்த ஓவியம் ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான விடையை இங்கு காணலாம்.
இந்த மோனலிசா ஓவியம் லா ஜியோகொண்டா எனவும் அழைக்கப்படுகிறது. ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்டது. இது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் என்றும் சொல்லப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா
இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான இந்த ஓவியம் லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மோனா லிசா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ஓவியம், கியோர்கியோ வசாரி அவர்கள் எழுதிய, “பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி மோன லிசாவிற்காக, லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம்” என்று சொல்லப்படுகிறது.
மோனலிசா ஓவியம் காணாமல் போய்விட்டதா..?
1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று திருடர்களால் திருடப்பட்டது. திருடப்பட்ட மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காக சாலோன் காரே அருங்காட்சியத்திற்கு சென்றார். அங்கு மோனலிசா ஓவியம் இல்லாததை கண்டு திடுக்கிட்டார்.
அந்த ஓவியம் திருடு போனதை தெரிந்து கொண்ட அவர் காவல் அதிகாரிகளிடம் சொல்லி கண்டுபிடிக்க சொல்கிறார்கள். அவர்களும் தேடுகிறார்கள். ஆனால் மோனலிசா ஓவியம் கிடைக்கவே இல்லை.
பின் 2 ஆண்டுகள் கழித்து ஓவியத்தை திருடிய திருடன் பிடிபட்டான். அவனிடம் விசாரணை செய்ததில், அருங்காட்சியகத்தில் துப்புரவு தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர் தான் மோனலிசா ஓவியத்தை களவாடினார் என்பது தெரிய வந்தது.
JCB ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.. இதற்கு பின் இப்படி ஒரு ரகசியமா
காரணம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையா, லியொனார்டோவின் ஓவியம் மீண்டும் இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என்று எண்ணி நிகழ்த்திய சதி என்று தெரிய வந்தது.
அதன் பின் மோனா லிசா 1913 ஆம் ஆண்டு மீண்டும் லூவர் அருங்காட்சியகத்திற்கு திரும்பியது. 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஓவியம் ரொம்பவும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த ஓவியம் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள் தாக்கப்படா வண்ணம் வடிவமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இன்று வரை இந்த ஓவியத்தை காண ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர். இப்படி தான் மோனலிசா ஓவியம் பிரபலமானது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |