திருமண விழாக்களில் ஆண்கள் மட்டும் ஏன் பரிமாறுகிறார்கள் தெரியுமா..?

Advertisement

திருமண விழாக்களில் ஆண்கள் ஏன் பரிமாறுகிறார்கள்  

வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக கல்யாணம், காதுகுத்து, வீடு குடிபோவது இதுபோன்ற பல சுப நிகழ்ச்சிகளுக்கு நாம் அனைவருமே சென்றிருப்போம். அப்படி செல்வது வழக்கம் தான். நம்மில் பலருக்கும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல ரொம்பவும் பிடிக்கும். ஒரு சிலர் கல்யாணத்திற்கு பொண்ணு மாப்பிள்ளையை பார்ப்பதற்காக செல்வார்கள். ஆனால் பலரும் விருந்திற்காக தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்கள். இப்படி செல்வதற்கு என்ன காரணம் என்று நம் அனைவருக்குமே தெரியும். என்ன நண்பர்களே யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை. நமக்கு சோறு தான் முக்கியம். சரி வாங்க இன்றைக்கு பார்க்கப்போகும் பதிவு என்னவென்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா

திருமண விழாக்களில் ஆண்கள் உணவு பரிமாற காரணம் என்ன..? 

திருமண விழாக்களில் ஆண்கள் ஏன் பரிமாறுகிறார்கள்  

பொதுவாக நாம் அனைவருமே திருமணம் போன்ற விசேஷங்களுக்கு சென்றிருப்போம். அங்கு விருந்தில் அமர்ந்து சாப்பிட்டும் இருப்போம். நாம் செல்வதே அதற்காக தானே.

சரி அப்படி சாப்பிடும் போதும், அங்கு உணவு பரிமாறுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பார்கள். இதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் நம் வீட்டில் ஏதும் விசேஷம் என்றாலும், ஆண்கள் தான் இருப்பார்கள்.

அப்படி ஆண்கள் மட்டும் ஏன் திருமண விழாக்களில் சமையல்காரர்களாகவும், பரிமாறுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.

JCB ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.. இதற்கு பின் இப்படி ஒரு ரகசியமா

பொதுவாக பெண்களை விட ஆண்கள் அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள். அது பணமாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. எதையும் செலவு செய்ய மனமே வராது. அதுவும் சமையலிலும் பொருட்களை கிள்ளி தான் போடுவார்கள். 

இதை தான் ஆண் கை அள்ளிப்போடும் கை பெண் கை கிள்ளிப்போடும் கை என்று சொல்கிறார்கள்.

அப்படி இருக்கையில் ஆயிரம் பேர் வந்து சாப்பிடும் திருமண நிகழ்ச்சியில்  சமைக்கும் உணவுகளில் மூலப்பொருட்களை அள்ளிப்போட்டால் தான் அதன் சுவை கூடுதலாக இருக்கும். 

அதுமட்டுமில்லாமல், திருமணம் மற்றும் ஹோட்டல் போன்ற இடங்களில் பணிகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.

இதன் காரணமாக தான் சுப நிகழ்ச்சிகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற இடங்களில் சமைப்பவர்கள் மற்றும் பரிமாறுபவர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement