Why is JCB Yellow in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! நாம் வாழும் வாழும் இந்த உலகில் தெரிந்து தினமும் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அதுபோல நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி எண்ணம் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். எங்கள் பதிவில் தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்று நம் பதிவில் JCB இயந்திரத்திற்கு பின் இருக்கும் ரகசியத்தை தெரிந்துகொள்ள போகின்றோம். சரி JCB இயந்திரம் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஆம்புலன்ஸில் ஏன் ஆங்கில வார்த்தை தலைகீழாக எழுதிருக்கிறார்கள் அதற்கு காரணம் என்ன
JCB இயந்திரம் பற்றிய தகவல்:
பொதுவாக JCB இயந்திரங்களை பார்க்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். JCB இயந்திரங்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்கு JCB இயந்திரங்கள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவருமே JCB இயந்திரத்தை பார்த்திருப்போம். அப்படி பார்க்கும் போது ஏன் JCB இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று யோசித்தது உண்டா..? அப்போ வாங்க அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன் JCB இயந்திரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு கலர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா |
J.C. Bamford Excavators Limited என்ற நிறுவனம் தான் சர்வதேச அளவில் சுருக்கமாக JCB என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் கட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் Excavators, Tractors மற்றும் Diesel Engines உட்பட சுமார் 300 வகையான இயந்திரங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் இந்தியா உள்பட 150 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு பெயர் எதுவும் சூட்டப்படாமல் இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா
நீண்ட காலமாக இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நிறுவனம் யோசித்தது. ஆனால் எந்த பெயரும் சரியாக பொருந்தவில்லை. கடைசியாக அந்த நிறுவனத்தின் நிறுவனரான Joseph Cyril Bamford அவரது பெயரே சூட்டப்பட்டது. இதை தான் JCB என்று அழைக்கின்றோம்.
JCB இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருக்க காரணம் என்ன..?
முதன் முதலில் உருவாக்கப்பட்ட JCB இயந்திரங்கள் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில் தான் இருந்தன. அதற்கு பிறகு அவர்கள் மஞ்சள் நிறத்தில் அறிமுகம் செய்தனர். இந்த மஞ்சள் நிறம் பகல் அல்லது இரவு என்று எந்த நேரம் என்றாலும் JCB இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும்.
இதன் மூலமாக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனால் தான் JCB இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |