Why Is The Fire Engine Red in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்..! அப்போ உங்களுக்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். எங்கள் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்று நாம் இந்த பதிவில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது என்ன என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. தீயணைப்பு வாகனத்தின் நிறத்திற்கு பின் இருக்கும் ரகசியத்தை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சரி தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஆம்புலன்ஸில் ஏன் ஆங்கில வார்த்தை தலைகீழாக எழுதிருக்கிறார்கள் அதற்கு காரணம் என்ன
தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது காரணம் தெரியுமா..?
பொதுவாக எங்காவது தீ விபத்து ஏற்பட்டால், உடனே தீயணைப்பு வீரர்களை தான் அழைப்போம். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பார்கள். அப்படி தீயை அணைக்க வரும் தீயணைப்பு வாகனம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
நாம் அனைவருமே தீயணைப்பு வாகனங்களை பார்த்திருப்போம். சரி நீங்கள் என்றாவது தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
தீவிபத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று இங்கு பார்ப்போம்.
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா |
முதன் முதலில் உருவாக்கப்பட்ட தீயணைப்பு வாகனம் சிவப்பு நிறத்தில் தான் இருந்தது. அதன் காரணமாக தான் எல்லா தீயணைப்பு வாகனமும் அதே நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறத்தையே இன்று வரை கடைபிடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல அந்த காலத்தில் சிவப்பு நிற பெயிண்ட் தான் விலை உயர்ந்ததாக இருந்தது. அதனால் உயிரை காப்பாற்றும் இந்த வாகனத்திற்கு சிவப்பு நிறத்தையே பயன்படுத்துகின்றனர்.
இதனால் பல நாடுகளில் சிவப்பு நிறத்திலேயே தீயணைப்பு வாகனங்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன் இந்தியாவை பொருத்தவரை சிவப்பு நிறம் மக்கள் மனதில் எச்சரிக்கையின் நிறமாக இருப்பதால் தீயணைப்பு வாகனம் சிவப்பு நிறத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் தீயணைப்பு வாகனம் வெவ்வேறு நிறங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |