Why is There a Hole in The Bathroom Sink in Tamil
பொதுவாக நாம் அனைவருமே நம் அருகில் உள்ள பொருட்களையோ அல்லது நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களையோ அதிகமாக கவனித்து இருக்க மாட்டோம். உதாரணமாக உங்கள் வீடுகளில் சமையலறையில் உள்ள சிங்கிற்கும் பாத்ரூமில் உள்ள சிங்கிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதனை யாரேனும் கவனித்தது உண்டா..? அதாவது, சமையலறையில் உள்ள சிங்கும் பாத்ரூமில் உள்ள ஒரே மாதிரியான வடிவமைப்பில் தான் இருக்கும். ஆனால் பாத்ரூமில் இருக்கும் வாஸ் ஃபேசனில் மட்டும் ஒரு துளை கூடுதலாக இருக்கும்..? அது எதற்கு இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா.? தெரியவில்லை என்றால் அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What is The Second Hole in The Sink For:
கழிவறையில் நாம் பயன்படுத்தும் வாஷ் ஃபேசனின் மேற்பகுதியில் ஒரு துளை கூடுதலாக இருக்கும். இந்த துளை எதற்கு இருக்கிறது என்றால், நாம் கை கழுவி கொண்டிருக்கும் போது அதிகப்படியான தண்ணீர் சேரும் பட்சத்தில் தொட்டி நிரம்பி வழியாமல் இருக்கவும், அதிகமான தண்ணீர் வடிந்து செல்வதற்காகவும் தான் இந்த கூடுதல் துளை உள்ளது.
முக்கியாக, வாஷ் ஃபேசனில் தண்ணீர் வடிந்து செல்ல அதன் அடிப்பகுதியில் இருக்கும் துளைகள் காற்றினால் அடைத்து நின்றாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் கூட மேலே உள்ள துளையின் வழியாக தண்ணீர் வடிந்து விடும். ஆகவே இதன் காரணமாகவே பாத்ரூமில் உள்ள வாஷ் ஃபேசனில் மட்டும் கூடுதலாக ஒரு துளை அமைக்கப்ட்டிருக்கும்.
ஆனால், வாஷ் ஃபேசனில் உள்ள கூடுதல் துளை ஏன் சமையலறையில் உள்ள சிங்கில் இல்லை என்று கேட்கிறீர்களா.? பொதுவாக நாம் சமையலறையில் இருக்கும் சிங்கில் கைகளை மட்டும் கழுவுவதில்லை பாத்திரம் கழுவுவோம், காய்கறிகளை சுத்தம் செய்வோம் இதுபோன்ற பலவற்றை சிங்கில் செய்வோம். இதனால் உணவு துணுக்குகள் பெரிய துளையில் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் தான் சிங்கிள் கூடுதல் துளை இருக்காது.
வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் இரண்டு பட்டன்கள் எதற்கு தெரியுமா.?
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |