தூக்கி எறியும் முட்டை ஓட்டில் பயன் இருக்கிறதா.? உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

முட்டை ஓடு பயன்கள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தூக்கி எறியும் முட்டை ஓட்டை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம். நாம் சமையலுக்கு பயன்படுத்தி தூக்கி எரியும் பொருட்களை கண்டிப்பாக பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து முட்டையில் நிறைந்துள்ளதால் தினமும் முட்டையை எடுத்துகொள்வார்கள். ஆனால் அந்த முட்டையின் ஓட்டை குப்பையில் தான் போடுவார்கள். இனிமேல் முட்டை ஓட்டை தூக்கி எரிய தேவையில்லை. வாங்க முட்டை ஓட்டை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ முட்டை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு..? 

ஆச்சர்யமூட்டும் முட்டை ஓட்டின் பயன்கள்:

 முட்டை ஓட்டின் பயன்கள்

முட்டை ஓட்டில் கால்சியம் மட்டுமன்றி புரோட்டீன், ப்ளூரைட், மெக்னீசியம், செலீனியம் போன்ற மைக்ரோ ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஒரு கிராம் முட்டை ஓட்டில் தோராயமாக 400 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அதாவது அரை  முட்டை ஓட்டில் 1000 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இவ்வளவு சத்து நிறைந்த முட்டை ஓட்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

பறவைகளுக்கு உணவு:

பறவைகளுக்கு உணவு

பறவைகளுக்கு தானியங்களை தான் உணவை கொடுப்போம். இல்லையென்றால் சாதம் இருந்தால் வைப்போம். இனி தூக்கி போடும் முட்டை ஓட்டை பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

செடிகளுக்கு உரம்:

செடிகளுக்கு உரம்

நீங்கள் செடிகளுக்கு செயற்கையான உரத்தை தான் பயன்படுத்துவீர்கள். அதுமட்டுமில்லாமல் காசு கொடுத்து உரங்களை வாங்காமல் முட்டையின் ஓட்டை உரமாக பயன்படுத்துங்கள். இப்படி பயன்படுத்துவதால் செடிகளுக்கு பூச்சி வராமல் நன்றாக வளரும்.

பாத்திரம் கழுவுதல்:

பாத்திரம் கழுவுதல்

முட்டை ஓடுகளை நன்றாக தூளாக உடைத்து கொள்ளுங்கள். இந்த தூளை விடாப்பிடி அழுக்கு உள்ள பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுத்தலாம்.

அலங்காரம் செய்து:

முட்டையை சிறியதாக உடைத்து, அதை பெயின்ட் அடித்து அலங்காரம் பொருளாக பயன்படுத்தலாம்.

சிங்க் அடைப்பு:

சிங்க் அடைப்பு

சமையலறையில் உள்ள அடைப்பை நீக்குவதற்கு முட்டை ஓட்டை பொடியாக உடைத்து கொள்ள வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் முட்டை ஓட்டை சிங்க்ல் போட வேண்டும். பின் அதில் சிறிதளவு வினிகரை ஊற்றினால் அடைப்பு சரி ஆகிவிடும்.

இனி முட்டை ஓட்டை தூக்கி எரியாமல் மேல் கூறப்பட்டுள்ளது போல் பயனுள்ள வகையில் முட்டை ஓட்டை பயன்படுத்துங்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Tips in tamil 

 

Advertisement