தண்ணீர் தொட்டி சுலபமாக சுத்தம் செய்வது எப்படி? Simple Way to Clean Water Tank in Tamil
வீடுகளில் இருக்கும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது மிகவும் பெரிய வேலை. அதனால் தான், பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்யாமல் வைத்திருப்பார்கள் அல்லது வேலைக்கு ஆள் வைத்து சுத்தம் செய்வார்கள். எனவே, அப்படி இல்லாமல், வீட்டின் தண்ணீர் தொட்டியை ஈசியாக சுத்தம் செய்வது எப்படி.? என்பதை படித்து பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
பொதுவாக, நம் வீட்டிற்கு எப்போதும் தண்ணீர் தேவைப்பட்டுகொண்டே இருக்கும். இதனால்,வாட்டர் டேங்க் முழுவதும் எப்போதும் தண்ணீர் நிரப்பி வைத்து கொள்வோம். இதனால், வாட்டர் டேங்க் விரைவில் பாசி பிடித்து அழுக்காகிவிடுகிறது. எனவே, வாட்டர் டேங்க்கை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஆகையால், மிகவும் எளிமையான முறையில் வாட்டர் டேங்கை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வது எப்படி.?
முதலில், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஒரு நீளமான டீப் எடுத்து கொள்ளுங்கள். அடுத்து பிளாடிஸ்க் வாட்டர் பாட்டிலின் வாய் பகுதியை நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். இப்போது, டீப்பின் ஒரு முனையில் வாட்டர் பாட்டிலின் வாய் பகுதியை வைத்து டேப் போட்டு ஒட்டி கொள்ளுங்கள். அடுத்து, டீப்பின் ஒரு முனையில் கைவைத்து அடைத்து கொண்டு மறுமுனையில் உள்ள வாட்டர் பாட்டில் வாய் பகுதியின் மூலம் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். டீப் நிரம்பும் வரை ஊற்றி கொள்ளுங்கள்.
பாத்ரூம் டைல்ஸ் மற்றும் சுவரில் உள்ள உப்பு கறை நீங்க இதை மட்டும் செய்யுங்கள்..!
இப்போது, வாட்டர் பாட்டில் வைத்துள்ள டீப்பின் முனையை வாட்டர் டேங்கின் உட்புறம் விட்டு அதிலுள்ள பாசி, அழுக்கு போன்றவரை வாட்டர் பாட்டில் மூலம் தேய்த்து விடுங்கள். மறுமுனையை லேசாக உறிஞ்சி கீழே அல்லது ஒரு வாழியில் போட்டு விட்டால் வாட்டர் டேங்கில் உள்ள அழுக்குக்களுடன் சேர்ந்து தண்ணீர் வெளியே வந்து விடும்.
அதன் பிறகு, டேங்க் கிளீனிங் செய்யக்கூடிய கிளீனிங் பவுடர், ஸ்ப்ரே அல்லது லிக்யூடு போன்றவற்றை பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு மீண்டும் ஒரு முறை அழுத்தி தேய்த்து விடுங்கள். மீண்டும், அதேபோல், டீப்பின் வழியாக தண்ணீரை உறிஞ்சி அழுக்காக தண்ணீரை வெளியேற்றுங்கள்.
இதேபோல், ஒன்றிற்கு இரண்டு முறை நல்ல தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து 1 மணி நேரம் வரை வெயிலில் வாட்டர் டெங்கை உலர விட்டு அதன் பிறகு, மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள்.
வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக இருக்க இந்த ஒரு லிக்விட் போதும்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |