பைக் சர்வீஸ் செய்யும் செலவை குறைக்க

Advertisement

பைக் சர்வீஸ் செய்யும் செலவை குறைப்பதற்கு என்ன செய்வது

நம் முன்னோர்கள் காலத்தில் மாட்டு வண்டி மற்றும் சைக்கிளை தான் பயன்படுத்தினார்க்ள. இதனால் சுற்றுசூழல் மாசுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் பைக் இல்லாத வீடுகளே இல்லை. பக்கத்தில் உள்ள கடைக்கு செல்வதாக இருந்தால் கூட பைக் தான் எடுத்து செல்கிறார்கள். சில பேர் பைக் வைத்திருப்பது புதிது போல வைத்திருப்பார்கள். சில பேர் பைக் வாங்கி 3 மாதம் தான் இருக்கும், ஆனால் அந்த பைக்கை பார்த்தால் 3 வருடம் போல் இருக்கும்.

நீங்கள் வைத்திருக்கும் பைக்கை பராமரிப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் சரியாக பைக்கை பராமரிக்காததால் அடிக்கடி பழுது அடைந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் பைக் சர்வீஸ் செய்யும் ஸ்;செலவை குறைப்பதற்கான வழியை அறிந்து கொள்வோம்.

டயர்:

பைக் சர்வீஸ் செய்யும் செலவை குறைப்பதற்கு என்ன செய்வது

உங்கள் வண்டியின் டயர்களின் காற்று சரியாக இருக்கிறதா என்று கவனித்து கொள்ளுங்கள். ஏனென்றால் டயரில் காற்று குறைவாக இருக்கும் போது அதனை நீங்கள் எடுத்து செல்லும் போது டயர் அடிபடும். அதனால் டயரில் சரியான காற்று இருப்பது அவசியமானது. 20,000 கிலோ மீட்டர் ஓடியதும் புதிய டயர் மாற்றுவது சிறந்தது.

சிறியதாக பிரச்சனை:

பைக்கில் ஏதவாது சிறியதாக பிரச்சனை இருந்தால் அதனை அப்போவே கவனியுங்கள், நீங்கள் சின்ன பிரச்சனையை அப்புறமாக பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தால் அவை பெரிய பிரச்சனையாக ஏற்படும்.

Second Hand -ல பைக், கார் வாங்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா செக் பண்ணி வாங்குங்கள்

ஆயில்:

பைக் சர்வீஸ் செய்யும் செலவை குறைப்பதற்கு என்ன செய்வது

 

வண்டியில் ஆயில் மாற்றுவது அவசியமானது, நீங்கள் ஆயிலை மாற்றாமல் அப்படியே விட்டால் பைக்கில் பல சத்தங்கள் வரும். அதனை கண்டாலே வண்டியில் ஆயில் மாற்ற வேண்டும் என்று நினையுங்கள். 5000 கிலோ மீட்டர் ஓட்டியதும் வண்டியின் ஆயிலை மாற்றுங்கள்.  12,000 முதல் 15,000 கிலோ மீட்டர் ஓடியதும் செயின்ஸ் ஸ்ப்ராஜெக்ட் மாற்ற வேண்டும்.

வெயில் மற்றும் மழை:

வண்டியை வெயில் மற்றும் மழையில் நிறுத்தாதீர்கள். எப்போதாவது வெயில் மற்றும் மழையில் இருந்தால் பரவாயில்லை. அதற்காக தினமும் வெயில் மற்றும் மழையில் இருந்தால் வண்டி சீக்கிரமாகவே வீணாகிடும்.

கழுவ வேண்டும்:

பைக் சர்வீஸ் செய்யும் செலவை குறைப்பதற்கு என்ன செய்வது

பைக்கை வாரத்திற்கு ஒரு முறை கழுவ வேண்டும். நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை ஆயுத பூஜை அன்று மட்டும் கழுவினால் வண்டி துருப்பிடித்து விடும். அதனால் வாரத்தில் ஒரு முறை வண்டியை கழுவுவதை பழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் பைக் புதுசு போல மாறவேண்டுமா! அப்போ இந்த பயனுள்ள டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement