உங்கள் வீட்டு தரை புதிய தரை மாதிரி மாறுவதற்கு இதை பயன்படுத்துங்க

Advertisement

வீட்டு  தரையை புதிதாக மாற்றுவதற்கு என்ன செய்வது

தினமும் வீட்டை மாப் போட்டாலும் சரி, கழுவி விட்டாலும் சரி சில கறைகள் அப்படியே இருக்கும். அந்த கறைகளால் நம் வீட்டு தரை பழையது போல இருக்கும். பழைய தரையை புதிதாக மாற்றுவதற்கு டிப்ஸை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம். வீட்டில் குழந்தைகள் இருந்தால் வீட்டு தரையை அசிங்கப்படுத்திவிடுவார்கள். சில கறைகளை நீக்கவே முடியாது. ஆனால் இனிமேல் விடாப்பிடியான கறைகளை அகற்றிவிடலாம். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்களே வீடு துடைக்க கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த டிப்ஸை Follow பண்ணுங்க

தரையை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் -1 கப்
  • ஆப்ப சோடா- 1 தேக்கரண்டி
  • பல் தேய்க்கும் பேஸ்ட்- 1/2 தேக்கரண்டி

தரையை சுத்தம் செய்வது எப்படி.?

ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் ஆப்ப சோடா- 1 தேக்கரண்டி , பல் தேய்க்கும் பேஸ்ட்- 1/2 தேக்கரண்டி சேர்க்கவும். இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து சிமெண்ட் தரை அல்லது டைல்ஸ் தரையில் அழுக்குகள் எங்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் கலந்த தண்ணீரை தெளிக்கவும். சிமெண்ட் தரையாக இருந்தால் கழுவி விடுங்கள். டைல்ஸ் தரையாக இருந்தால் மாப் போட்டு விடுங்கள்.

இப்போ பாருங்க உங்கள் வீட்டில் இருந்த விடாப்பிடியான இருந்த கறைகள் நீங்கியிருக்கும். அடுத்து நீங்கள் எப்பொழுதும் வீட்டை எப்படி துடைப்பீர்களோ அந்த மாதிரி துடைத்துவிடுங்கள்.

மாப் போடும் தண்ணீரில்  நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பை கொஞ்சம் சேர்த்து தரையை சுத்தம் செய்தால் தரை பளிச்சுன்னு இருக்கும். அதுமட்டுமில்லாமல் தரை பிசுபிசுன்னு காலில் ஒட்டாது.

வீட்டை மாப் போட்ட பிறகு மறந்தும் கூட பேன் போடாதீர்கள். பேன் போட்டு காய்ந்தால் தரை கொடு கோடாக இருக்கும். அதனால் பேன் போட்டு தரையை காய விடாதீர்கள்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் அடடே வீட்டு தரை புதிதாக இருக்கு. இப்படி இருக்குறதுக்கு என்ன பண்றீங்க அப்படினு கேட்பார்கள். நீங்கள் பொதுநலம்.காம் பதிவில் வீட்டு தரையை மாற்றுவதற்கு டிப்ஸ் சொல்லியிருந்தார்கள். அதை பயன்படுத்தினேன் பழைய தரை மாதிரி இருந்தது புதிய தரை போல் மாறிவிட்டது. நீயும் ட்ரை பண்ணி பாரு அப்டின்னு உங்கள் நண்பரிடம் சொல்வீர்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil

 

Advertisement