பொங்கலுக்கு பித்தளை சாமான்களை பளிச்சுன்னு இருக்க இந்த பவுடர் போதும்

Advertisement

பொங்கலுக்கு பித்தளை சாமான்களை பளிச்சுன்னு இருக்க இந்த பவுடர் போதும்

பொங்கல் என்றாலே வீட்டை ஓட்டடை அடித்து, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தயும் கழுவுவோம். மேலும் வீட்டிற்கு பெயிண்ட் அடித்து வீட்டை புதிதாக மாற்றுவோம். இந்த  2024-ம் ஆண்டிற்கான பொங்கல் வருகின்ற 15-ம் தேதி வருகின்றது. இந்நேரமெல்லாம் எல்லாரும் வீட்டை சுத்தப்படுத்துவதற்கு ஆரம்பித்துருப்பீர்கள்.

இதில் பாத்திரங்களை விலக்குவது ஒரு புறமாக இருந்தாலும், பூஜை சாமான்களை விலக்குவது ஈஸியான வேலை இல்லை, எவ்வளவு பாத்திரங்களை தேய்த்தாலும் பளிச்சென்று மாறாது. அதனால் தான் இந்த பதிவில் ஒரு பவுடர் தயாரித்து அதன் மூலமாக பித்தளை பாத்திரங்களை விலக்கினாள் பளிச்சென்று மாறும்.  சரி வாங்க பவுடர் தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

சபீனா- ஒரு கப்

கோதுமை -ஒரு கப்

பேக்கிங் சோடா- 2 தேக்கரண்டி

லெமன் சால்ட்- 2 தேக்கரண்டி

கல் உப்பு- 2 தேக்கரண்டி

செம்மண்- ஒரு  கப்

துணி துவைக்கும் பவுடர்- 2 தேக்கரண்டி

கறைப்படிந்த டீ வடிக்கட்டியை நிமிடத்தில் புத்தம் புதுசாக மாற்ற டிப்ஸ்..

பவுடர் செய்முறை:

பொங்கலுக்கு பித்தளை சாமான்களை பளிச்சுன்னு இருக்க இந்த பவுடர் போதும்

முதலில் ஒரு மூடி போட்ட டப்பா அல்லது பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும், அதில் சபீனா, கோதுமை ,பேக்கிங் சோடா, லெமன் சால்ட்,  உப்பு,  செம்மண், துணி துவைக்கும் பவுடர் போன்ற பொருட்களை மேல் கூறப்பட்டுள்ள அளவுகளில் எடுத்து கலந்து கொள்ளவும். கலந்து விட்ட பிறகு மூடி வைத்து விட வேண்டும்.

இந்த பவுடரிலிருந்து 2 தேக்கரண்டி எடுத்து தண்ணீர் கலந்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி பூஜை பொருட்கள் மற்றும் பித்தளை பொருட்களில் முழுவதும் தேய்த்து கொள்ள வேண்டும். இதனால் 15 நிமிடத்திற்கு ஊற விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் பாத்திரம் தேய்க்கும் ஸ்பாஞ் அல்லது நார் போன்றவற்றை பயன்படுத்தி தேய்த்து விட்டு கழுவி விட வேண்டும். நீங்கள் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டும் என்று அவசியமில்லை. லேசாக தேய்த்து விட்டு கழுவினாலே பளிச்சென்று இருக்கும்.

பித்தளை மற்றும் பூஜை பொருட்களுக்கு மட்டுமில்லை வெள்ளி பொருட்களுக்கும் இந்த பவுடரை பயன்படுத்தி தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

Advertisement