கோடை கால சுற்றுலா தளங்கள் | Summer Vacation Places List in Tamil

கோடை சுற்றுலா தளங்கள் | Kodai Sutrula Place in Tamil

கோடை வெப்பத்தின் தாக்கம் இப்போதே அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரே எண்ணம் குளிரான பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதுதான். இந்திய நாட்டை பொறுத்தவரை பல குளிர் பிரதேசங்கள் இருக்கிறது. கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். நாம் இந்த பதிவில் இந்த வருட கோடை காலத்தை இனிமையாக மாற்ற கோடை சுற்றுலா தளங்களை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்

கூர்க் (கொடகு) – கர்நாடகா:

 கோடை சுற்றுலா தளங்கள்

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் எனும் இடம் கோடை வெயிலில் சுற்றுலா செல்வதற்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இந்த இடமானது மிகுந்த பனிமூட்டமும் குளிர்ந்த பருவ நிலையில் இருப்பதால் உள்ளூரில் இருக்கும் பயணிகள் முதல் வெளியாட்கள் வரை சுற்றி பார்ப்பதற்கு மிக சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. மக்கள் மனதையும் கவரக்கூடிய இடமாக இருக்கிறது.

ரிஷிகேஷ் – உத்தராகண்ட்:

 கோடை கால சுற்றுலா தளங்கள்

உலகின் யோகா தலைநகரமாக இருப்பது ரிஷிகேஷ். இந்த இடமானது ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களை அதிகமாக ஈர்க்கிறது. இந்த ரிஷிகேஷ் சுற்றுலா தளமானது கங்கை ஆறு மற்றும் பசுமையான மலைகளால் சூழப்பட்டு மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு சிறந்த தியான இடமாக அமைந்துள்ளது.

தவாங் – அருணாச்சல பிரதேசம்:

 summer vacation places list in tamil

இந்த தவங் சுற்றுலா தளமானது மதம், வரலாறு, இயற்கையை கலவையாக கொண்டுள்ளது. கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது இந்த தவாங். இந்த இடத்தில் அதிகமாக புத்த மடாலயங்கள் நிறைந்துள்ளது. இங்கு சுற்றுலா செல்ல ஆசைப்படுபவர்கள் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பயணம் செய்யலாம். இந்த மாதம் மட்டுமல்லாமல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் சுற்றுலா செல்ல ஏற்ற மாதமாக இருக்கிறது.

ஊட்டி – தமிழ்நாடு:

 kodai sutrula place in tamil

தென்னிந்தியாவின் சுற்றுலா இடத்திற்கென தனி தன்மை பெற்றுள்ள இடமாக இருப்பது ஊட்டி. ஊட்டி என்றாலே அனைவருக்கும் பிடித்த இடமாக விளங்குகிறது. பிரிட்டிஷ் இனத்தவர்கள் ஊட்டியில் கோடை காலத்தில் வந்து தங்குவதற்காக காட்டேஜ், பூங்காக்கள், சர்ச், உயிரியல் பூங்கா போன்றவை அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் விரும்பும் சுற்றுலா தளங்களில் ஊட்டியும் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.

உலகின் மிக ஆபத்தான இடங்கள்

டார்ஜிலிங் – மேற்கு வங்கம்:

 கோடை சுற்றுலா தளங்கள்

இந்த இடத்தில் சுற்றிலும் தேயிலை தோட்டமும், பின்புறத்தில் இமயமலையும் இயற்கை தோற்றத்துடன் காட்சி தருகிறது. வருடா வருடம் இந்த பகுதிக்கு பல பேர் சுற்றுலா பயணிகளாக வருகிறார்கள். இந்த இடத்திற்கு சுற்றுலா செல்ல மே மற்றும் ஜூன் மாதம் சிறந்த காலநிலையாக இருக்கிறது.

மூணாறு – கேரளா:

 கோடை கால சுற்றுலா தளங்கள்

கேரளாவின் முக்கியமான சுற்றுலா பகுதியாக இருக்கிறது மூணாறு. மூணாறு சுற்றுலா தளத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வருவதற்கு யாருக்குமே மனம் இருக்காது. மே மாதங்களில் இந்த மூணாறு இடத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

பஹல்கம் – காஷ்மீர்:

 summer vacation places list in tamil

மே மாத வெயில் தாக்கத்தால் மக்கள் பலரும் இந்த பஹல்கம் சுற்றுலா தளத்திற்கு வருகிறார்கள். இந்த இடத்தை சுற்றி 20 ஏரிகள் அமைந்துள்ளது. மேலும் இந்திய நாட்டின் முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது.

மணலி – இமாச்சல் பிரதேசம்:

 kodai sutrula place in tamil

கோடையில் அனல் காற்று, வெயில் கொளுத்தும் நிலையில் மணலி இடத்தில் மட்டும் அதற்கென அடையாளமே இருக்காது. மணலியில் இருந்து 53 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரோதங் (Rohtang) பகுதியில் பனிமலைகள் அமைந்துள்ளன. பாலிவுட் இயக்குநர்களின் பேவரிட் இடமான இங்கு பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய சிறப்பு மிகுந்த இடங்கள்..!

நைனிடால் – உத்தராகண்ட்:

 kodai sutrula place in tamil

டெல்லியில் இருக்கும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பக்கத்தில் இருக்கும் உத்தராகண்ட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம். நைனிடாலின் இரவு வேளை மிகவும் பிரமிக்கக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் நிலா மற்றும் நட்சத்திரங்கள் நைனிடால் ஏரியில் அழகாக காட்சியளிக்கும். இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் அழகான மலைப்பகுதி அமைந்திருப்பது தான்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil