செப்டம்பர் to மார்ச் சுற்றி பார்க்க வேண்டிய அருமையான இடம்

Advertisement

கேரளாவில் சிறந்த இடங்கள்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் கேரளாவில் சுற்றி பார்க்க வேண்டிய சிறந்த இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம். வருடத்தில் ஒரு முறை குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு செல்லுவோம். அப்படி செல்லும் போது சிறந்த இடமாக தேடுவோம். அப்படி தேடும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். கேரளவே அழகாக இருக்கும். அதில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அதில் சில இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒சுற்றுலாவிற்க்கு செல்பவர்கள் இந்த கோட்டைகளை பார்க்க மறந்துடாதீங்க

மூணார் சுற்றுலா இடங்கள்:

மூணார் சுற்றுலா இடங்கள்

தென்னிந்தியாவில் காஸ்மீர் என்று அழைக்கப்படுவது மூணார். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. மூணார் குளிர்ச்சியான இடமாக விளங்குகிறது. tea musium, திரவிகுளம் நேஷனல் பார்க், மாட்டுப்பட்டி டேம் இன்னும் பல இடங்கள் உள்ளது. ஒரு வாரம் தங்கி பார்ப்பதற்கு மூணாறில் பல இடங்கள் உள்ளது. நவம்பர்  to பிப்ரவரி மூணாறுக்கு செல்ல உகந்த மாதங்களாகும்.

ஆலப்புழா படகு வீடு:

ஆலப்புழா படகு வீடு

ஆலப்புழா முழுவதும் தண்ணீரால் சூழப்பட்ட இடமாகும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆலப்புழாவில் உள்ள மக்கள் அன்றாட தேவைகளுக்கு படகு மூலமாக தான் செல்வார்கள். வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமை படகு போட்டி நடைபெறும். அங்கு மிகவும் பிரபலமானது படகு போட்டி. இதை பார்ப்பதற்கு வெளி மாநிலம், வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் வருவார்கள். ஆலப்புழா படகு வீட்டில் உணவு அருமையாக இருக்கும். அதிலும் மீன் பொரியல் சூப்பரா இருக்கும்.

கோவளம் கடற்கரை கேரளா:

கோவளம் கடற்கரை கேரளா

கோவளம் கடற்கரை சர்வதேச அளவில் புகழ்பெற்று சுற்றுலா தளம் வரும் மக்களை கவர்கிறது. கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் கோவளம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் சூரிய ஒளியை பெறுவதற்காக வெளிநாட்டிலுருந்து மக்கள் வருகை தருகிறார்கள். செப்டம்பர் to மார்ச் போன்ற மாதங்கள் கோவளம் கடற்கரை செல்வதற்கு உகந்த மாதங்களாக இருக்கும்.

தேக்கடி சுற்றுலா தலங்கள்:

தேக்கடி சுற்றுலா தலங்கள்

பசுமை மர காடுகளால் அமைந்தது தேக்கடி. தேக்கடி எல்லா மாதங்களிலும் செல்லலாம். வன விலங்குகள் நிறைய காணப்படும். தேக்கடியில் உள்ள ஏரியில் படகில் பயணம் செய்வதும், யானையில் ஏறி பயணம் செய்வதும் அருமையாக இருக்கும்.

வயநாடு கேரளா:

வயநாடு கேரளா

மேற்கு தொடர்ச்சி மலைகளாலும், பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ளது வயநாடு. குளிர்ச்சியான மலை பிரதேசம் வயநாடு. வாணாசுரன் டேம், மீன்முட்டி   நீர்வீழ்ச்சி இன்னும் பல இடங்கள் உள்ளது.

கொச்சி சுற்றுலா:

கொச்சி சுற்றுலா

கேரளாவில் மலைப்பார் கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம் நகரம் கொச்சி. இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் சிறப்பு பெற்றது கொச்சி. பீச் கொச்சி கோட்டை, இந்தோ-போர்த்துகீசிய மியூசியம் இன்னும் பல இடங்கள் உள்ளது. அக்டோபர் to பிப்ரவரி போன்ற மாதங்கள் ஏற்ற மாதங்களாக இருக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement