கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாறு | Ramanujar History Tamil

சீனிவாச  ராமானுஜன் வாழ்க்கை வரலாறு | Srinivasa Ramanujan in Tamil

நாம் அனைவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். விருப்பப்பட்ட துறையில் நன்றாக படித்தால் நம் வாழ்க்கையும் வரலாறு ஆகும். எது வாங்க நினைத்தாலும் அல்லது செய்ய நினைத்தாலும் இவ்வளவு  செலவு வரும் என்று கணக்கு செய்வோம்.  கணக்கு துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை படைத்தவர்  ராமானுஜர்.

எல்லாருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகவில்லை  வரலாறு ஆனவர்கள் எல்லாரும் தனக்கென வாழ்ந்ததில்லை. அந்த வகையில் இன்றைய பதிவில் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை பற்றி காண்போம்.

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள்:

Srinivasa Ramanujan in Tamil

  • ராமானுஜன் 22.12.1887 திங்கட்கிழமை ஈரோடு எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சீனிவாசன், தாயார் பெயர் கோமளம் ஆகும். இவர் பிறந்து 3 ஆண்டுகள் பேச்சுத்திறன் இல்லாமல் இருந்தார்.
  • ராமானுஜரின் தந்தை மற்றும் தாத்தா துணி கடையில் எழுத்தராக பணியாற்றினார். தாய் வழி தாத்தா முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக பணியாற்றினார். ராமானுஜர் எளிய குடும்பத்தில் ஏழ்மையாக வளர்ந்து வந்தார்.

ராமானுஜன் கல்வி:

  • ராமானுஜன் 1892 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் படிக்க தொடங்கினார். இவர் படிக்க ஆரம்பித்த குறுகிய நாட்களிலே இவரது குடும்பம் கும்பகோணத்திற்கு புலம் பெயர்ந்தது. கும்பகோணத்தில் கல்யாணம் என்ற தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1897 ஆம் ஆண்டு மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை முடித்தார்.
  • 1897 ஆம் ஆண்டு கும்பகோணம் நகர் உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தார். 1897 ஆம் ஆண்டிலுருந்து முறையாக கணிதம் கற்க தொடங்கினார்.
  • அவர் 11 ஆம் வயதில் அவர் வீட்டில் குடியிருந்த மாணவர்களிடம் எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய கோணவியல் புத்தகத்தை வாங்கி படித்தார். அந்த புத்தகத்தை 13ஆம் வயதில்  கற்று தேர்ச்சியடைந்தார்.
  • ராமானுஜன் உயர் நிலை பள்ளியில் சிறந்த மாணவனாக பயின்று பல பரிசுகளை வென்றார்.

கணிதத்தின் மீது ராமானுஜருக்கு ஏற்பட்ட ஆர்வம்:

  • அவர் பதினாறாம் வயதில் பெற்ற எ சினாப்சிஸ் ஆஃப் எலமெண்டரி ரிசல்ட்ஸ் இன் ப்யூர் அண்ட் அப்லைட் மாதேமேட்டிக்ஸ் என்ற புத்தகம் அவருடைய வாழ்வில் ஆரம்பமாக இருந்தது. அந்த புத்தகம் எளிமையான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித முடிவுகளின் தொகுப்பாகும். இந்த புத்தகம் ராமானுஜன் கணிதத்தின் மீது வைத்திருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
  • 1904– ல் ராமானுஜன் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவர் தொடர் (1/n)யை ஆய்வு செய்து 15 தசம இடங்களுக்கு ஆய்லரின் மாறிலியை கணக்கிட்டார்.
  • கும்பகோணம் அரசு கல்லூரி ராமானுஜருக்கு உதவி தொகை வழங்கியது. ராமானுஜர் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி ஆகிய பாடங்கள் கற்க வேண்டும். ஆனால் கணிதத்தின் மீது வைத்த ஆர்வத்தால் மற்ற பாடங்களில் தோல்வியுற்றார். இதனால் அவர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.
  • நண்பர்களின் உதவியாலும், கணித கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்யவும், தனது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு செய்யவும் வாழ்க்கையை தொடங்கினார்.
  • 1906-ல் ராமானுஜன் சென்னையில்  பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார்.
  • 1908-ல் தொடரும் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடரை படித்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
  • 1909-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகிவிட்டது.

ராமானுஜன் சாதனை: 

  • 1913 மே மாதத்தில் சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜருக்கு இரண்டு ஆண்டுகள் உதவி தொகை வழங்கியது.
  • 1914-ல் ராமானுஜத்தின் பங்களிப்பை இணைந்து தொடங்குவதற்காக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிக்கு வரவழைத்தது. ஹார்டி ராமானுஜருடன் கூட்டணி முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது.  ஹார்டி அவர்களுடைய கூட்டு அறிக்கையில் ராமானுஜன் அவர்கள் ப(n) சூத்திரத்தை (Asymptotic Formula for p(n)) என கொடுத்தார்.

ராமானுஜரின் வறுமை:

  • ராமானுஜர் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சார்ந்தவர். இவருக்கு ஆரம்பத்திலுருந்து உணவு பிரச்சனை இருந்தது. முதல் உலகப் போர் வெடித்தபோது உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்தார்.
  • மார்ச் 16, 1916 ஆம் ஆண்டில் ராமானுஜன் அவர்கள் அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். ராமானுஜத்தின் ஏழு ஆவணங்களைக் கொண்ட உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.

ராமானுஜர் இறப்பு:

  • 1917-ல் ராமானுஜன் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிடுவார் என்று நினைத்தனர். செப்டம்பரில் அவருடைய உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்தது.
  • பிப்ரவரி 18, 1918ல், கேம்பிரிட்ஜ் ஃபிலோசஃபிக்கல் சொசைட்டியில் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் அவரின் உடல்நிலை குன்றியதால் ஏப்ரல் 6, 1920 அன்று இறந்தார்.
காமராஜர் வாழ்க்கை வரலாறு

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil