இனி பியூட்டி பார்லர் போகாதீங்க இதை ட்ரை பண்ணுங்க..! beauty tips tamil..!
அழகு குறிப்பு டிப்ஸ் / beauty tips tamil – இப்போது எல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களும் பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை அழகு படுத்திக்கொள்கின்றனர். இருப்பினும் சில பெண்களால் பியூட்டி பார்கள் சென்று ஃபேஷியல் செய்து கொள்ள முடியாது. இனி அவர்கள் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.
இங்கு பியூட்டி பார்லருக்கு செல்லாமலே அழகை அதிகரிக்க சில அழகு குறிப்பு டிப்ஸ் உள்ளது. அவற்றை தினமும் செய்து வந்தாலே போதும் இயற்கையான முறையிலேயே உங்கள் அழகை அதிகரிக்கலாம்.
சரி வீட்டிலேயே செய்ய கூடிய ஃபேஷ் பேக் (Face pack at home) பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!
![]() |
அழகு குறிப்பு டிப்ஸ் – நெல்லிக்காய் (Face pack at home):
செலவு இல்லாமல் ஃபேஷ் பேக் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
முதலில் நான்கு அல்லது ஐந்து நெல்லிக்காயை சுத்தமாக கழுவி, பின்பு விதையை நீக்கிவிட்டு பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய நெல்லிக்காயை மிக்ஷியில் போட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த இந்த பேஸ்ட்டினை முகத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தயிரில் உள்ள பிளிச்சிங் தன்மை சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்திருக்க உதவும்.
தேன் சருமத்தில் உள்ள சுருக்கங்களை அகற்றி சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும். மேலும் நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கரும் திட்டுகள் ஆகியவற்றை போக்கும்.
இந்த அழகு குறிப்பு டிப்ஸை(alagu kurippu 1000) வாரத்தில் மூன்று முறை செய்து வர நல்ல மாற்றத்தை உணர முடியும்.
![]() |
அழகு குறிப்பு டிப்ஸ் – துளசி ஃபேஷ் பேக் (Face pack at home):-
துளசி சருமத்தில் வழியும் எண்ணெய் தன்மையை அகற்ற உதவும். எனவே ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் துளசி தூள் மற்றும் ஒரு ஸ்பூன் வேப்பிலை தூள், 1/2 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் மற்றும் 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின்பு முகத்தை சுத்தமாக கழுவி, கலந்து வைத்த்துள்ள இந்த பேக்கினை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வேப்பிலை பவுடர் சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும், கஸ்துரி மஞ்சள் சருமத்தை என்றும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும்.
இந்த அழகு குறிப்பு டிப்ஸினை ஆண்/பெண் இருபாலரும் பயன்படுத்தலாம். முகத்திற்கு நல்ல பொலிவினை கொடுக்கும். இந்த அழகு குறிப்பு முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வரலாம்.
துளசி பவுடர் மற்றும் வேப்பிலை பவுடர் இரண்டும் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.
![]() |
குறிப்பு:
இந்த இரண்டு ஃபேஷ் பேக்கையும் முகத்தை சுத்தமாக கழுவிய பின்பு தான் அப்ளை செய்ய வேண்டும்.
ஃபேஷ் பேக் முகத்தில் அப்ளை செய்த 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவும் போது, சோப்பு போட்டு கழுவ வேண்டும். சாதாரணமாக சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும்.
இந்த இரண்டு ஃபேஷ் பேக்கில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தை உணரமுடியும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |